இலங்கையின் 7 மாவட்டங்களில், அவசர அனர்த்த எச்சரிக்கை
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் பல இடங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய 7 இடங்களில் மண்சரிவுகளும் கல் உருளுதல் போன்ற சம்பவங்களும் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டின் பல இடங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment