5 பேர் மரணமடைந்த விபத்தை ஏற்படுத்திய, சாரதிக்கு அனுமதிபத்திரம் இல்லை (வீடியோ)
அத்துருகிரிய - கொஸ்கந்தவில பிரதேசத்தில் ஐந்து பேர் மரணத்துக்கு காரணமாக அமைந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதிக்கு, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதித்திரம் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேருந்து சாரதியையும், பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், அடுத்த மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
குறுக்கு வீதி ஒன்றில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, பிரதான வீதியில் பிரவேசிக்க முற்பட்ட வேளையில், பேருந்து ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தது. (வீடியோ)

கொல்லப்பட்டவர்கள் பௌத்தனைத்தவிர வேறு யாராவது இருந்திருந்தால் சாரதிக்கு அனுமதி பத்திரம் இல்லாத செய்தியை போலிஸ் வெளியிட்டிருக்காது.நமது நாட்டில் பௌத்தனுக்கு ஒரு சட்டம் மாற்று மதத்தினருக்கு ஒரு சட்டம் நம் தாய் திரு நாட்டில்
ReplyDelete