Header Ads



ஹஜ் பெருநாளை கொண்டாடச் சென்றவர்கள் விபத்து - ஒருவர் வபாத், 3 பேர் காயம்

-ஏ.எஸ்.எம்.யாசீம்-

திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் மரதங்கடவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதியதினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவப்பொத்தானை, திப்பிரியத்தாவெல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.ரஹீம் (வயது 27) என்பவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த எம்.மசூத் (வயது 21), எஸ்.முஹாசீக் (வயது 27), எஸ்.எம்.உமைர்தீன் (வயது 19) ஆகியோரே காயமடைந்துள்ள நிலையில் ஹொரவப்பொத்தானை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவதற்காக இவர்கள் நான்கு பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் இதன்போதே இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.