UPFA யின் வெற்றியை தடுத்துநிறுத்தியது மைத்திரிதான் - விமல் வீரவன்ச ஆவேசம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் அதிகளவு ஆசனங்களை வென்று ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலுவான ஓர் எதிர்க்கட்சியாக எதிர்காலத்தில் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக கடிதம் வெளியிட்டமை தேர்தல் தோல்விக்கு பெரும் தாக்கத்தை செலுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியினதும் கூட்டணியினதும் பொதுச் செயலாளர்களை பணி நீக்கியமை, கடிதம் அனுப்பியமை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

wimal, biggest crook of mahinda regime.
ReplyDeleteWimal Weerawansa is a crook. He betrayed JVP
ReplyDeleteWimal will punish soon by god
ReplyDelete