Header Ads



UPFA யின் தேசியப் பட்டியலில் பௌசி, ஹிஸ்புல்லா, பைசர் முஸ்தபா - ரங்காவுக்கு கதவடைப்பு (பட்டியல் இணைப்பு)


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டிலில் இடம்பெற்றிருந்த ஜே. ஸ்ரீரங்கா, ஜீ.எல். பீரிஸ், டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ அத்தநாயக்க, ரொஜினோல்ட் குரே, ஜீவன் குமாரதுங்க, டிரான் அலஸ், பிரபா கணேசன், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பிரியசிறி விஜேநாயக்க, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் பேராசிரியர் மொஹமட் ஹூசைன் ரிஸ்மி செரீப், ஷிரால் லக்திலக்க, பேராசிரியர் கொல்வின் குணரத்ன, பேராசிரியர் கபில குணசேகர, கலாநிதி பீ.ஏ. ரத்னபால, கருப்பையா கணேசமூர்த்தி, லெஸ்லி தேவேந்திர, சோமவீர சந்திரசிறி, எம்.எஸ். உதுமா லெப்பை, ஜயந்த வீரசிங்க, எம்.எப்.எம். முஸ்ஸாமில், கெவிந்து குமாரதுங்க ஆகியோரது பெயர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பட்டியலில் ஏ.எச்.எம். பௌசி, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றிருந்ததுடன் அவர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

6 comments:

  1. More than 90% of Muslims voted for UNP but only 3 MPs on national list. UPFA got less than 10% of Muslim votes but 3 national list MPs. Ranil can not be trusted.

    ReplyDelete
    Replies
    1. Only one MP was selected through UPFA.. That's the reason ...

      Delete
  2. please do the need full action with this position for all SriLanakan singale,Hindu,Muslim and Christian. Specially, try to make unity between these all communities and more care about minority

    ReplyDelete
  3. perinawatha kachchi ethuvaha irunthalum muslimkalin thaniththuwaththai aaddam kanawaipathe ivvarana thesiyapaddiyal alankarippukalahum

    ReplyDelete
  4. நாம் விகிதாசார அடிப்படையில் பார்த்தல்கூட நமக்கு 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியாகத்தான் இருக்கிறது அப்படிப்பார்த்தாலும் ஒரு உறுப்பினர் கூடுதல்தான்.அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் 71% சிங்களவர்கள் 20% தமிழர்கள் எத்தனை உறுப்பினர்கள் என்பதையும் 9% நமக்கு 21 முஸ்லிம்கள் இருப்பது சந்தோசப்படவேண்டிய விடயம்..இடை விடுத்து பொதபொத என்று கூறிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை .

    ReplyDelete
  5. Well said Mustafa Jawfer

    ReplyDelete

Powered by Blogger.