Header Ads



UPFA நிறைவேற்றுக் குழுவிலிருந்து குமார், சந்திரசேன, பவித்ரா, டிலான் நீக்கப்பட்டனர்


முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம, எஸ்.எம். சந்திரசேன,   பவித்ரா வன்னியாராச்சி,  டிலான் பெரேரா போன்றவர்களுக்கும் விலக்கல் கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுநத்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பதில் பொதுச் செயலாளர்கள் இது குறித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு கடுமையான கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.