Header Ads



அதிக ஆசனங்களை பெற்ற UNP, விரும்பியவர்களை இணைத்து ஆட்சி நடத்தலாம் - சோபித தேரர்

சமூக நீதிக்கான இயக்கத்தின்; தலைவர் மாதுலுவாவே சோபித தேரர், தேசிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றமையானது, வெறுமனே நகைச்சுவையாகவே அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் செய்த தவறை மைத்திரிபால செய்யமாட்டார் என்று தாம் நம்புவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையை பார்க்கும்போது நாடாளுமன்றத்தில் உள்ள 225பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று தோன்றுகிறது. 

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றன.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜேவிபியும் இதற்கு ஆதரவு வழங்கவில்லை எனில் அது எவ்வாறு தேசிய அரசாங்கமாக இருக்க முடியும் என்று சோபித தேரர் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் பொதுத்தேர்தலில் பெருமளவான ஆசனங்களை வெற்றி கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியவர்களை சேர்த்துக் கொண்டு சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்திச் செல்லலாம் என்று சோபித தேரர் ஆலோசனை கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.