Header Ads



தேசிய அரசாங்கத்தை எதிர்த்தால், தனியாக ஆட்சி அமைப்பதைத் தவிர மாற்று வழியில்லை - கபீர் ஹாசிமிடமிருந்து எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி தனியாக அரசாங்கத்தை அமைக்கத் தயார் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தேவையான சந்தர்ப்பங்களில் ஆதரவினை வழங்கும்.

எதிர்க்கட்சிகள் எந்தளவிற்கு நெகிழ்வு போக்குடன் செயற்படுகின்றன என்பதனை அவதானித்து வருகின்றோம்.

தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் தேசிய அரசாங்கத்தை எதிர்த்தால், தனியாக ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் அதற்கான ஆற்றல் காணப்படுவதாகவும் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.