'தேசிய பட்டியலில் முஸ்லிம்களை UNP புறக்கணிக்கவில்லை'
-அஸ்ரப் ஏ சமத்-
ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலில் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபை தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முகாமையாளரும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளவருமான ஹிதாயத் சத்தார் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்டார்
இம்முறை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கிய முஸ்லிம்களில் பெரும் பாலானோர் வெற்றிவாகை சூடியுள்ளார்கள்.கேகாலையில் எமது கட்சி செயலாளர் கபீர் கசீம் கொழும்பில் மரிக்கார் ,முஜீப் கண்டியில் முன்னாள் அமைச்சர் ஹலீம் திருகோணமலையில் இம்ரான் என ஐக்கிய தேசிய கட்சி நேரடியாக களமிரங்கிய முஸ்லிம்கள் பலர் தெளிவான வெற்றிகளை பெற்றுள்ளனர் .
துரதிஷ்டவசமாக ஒரு சிலர் வெற்றிபெறவில்லை ஆனால் சுதந்திர கட்சியில் முஸ்லிம்கள் ( வன்னியில் மஸ்தானை தவிர) எவரும் வெற்றிபெறவில்லை என்பதை மட்டும் கருதி சுதந்திர கட்சி தேசிய பட்டியல் வழங்கவில்லை முன்னாள்அமைச்சர் பவுசி ஒரு மூத்த சுதந்திர கட்சி காரர் ,பைசர் முஸ்தபா ஒரு சட்ட வல்லுநர் ஜனதிபதியின் சட்ட ஆலோசகர் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாஹ் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் போன்ற காரணங்களுக்காக குறித்த மூவருக்கும் தேசிய பட்டியலை சுதந்திர கட்சி வழங்கியிருக்கலாம்.
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் முஸ்லிம்களை அரவணைக்கும் கட்சி முஸ்லிம்களும் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அமையவுள்ள அரசாங்கத்தில் கபீர் ஹசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் பலமான அமைச்சுக்களை வகிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை தொடர்ந்தும் கபீர் ஹசீம் அவர்களே கட்சியின் பொது செயலாளர் இதுதான் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களுக்கு அளித்துள்ள கவுரவம் என குறிப்பிட்டார்.
ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க்கப்படாதது தொடர்ப்பில் அதிருப்தி வெளியிடப்படுவது தொடர்ப்பிலும் கருத்து வெளியிட்டார்.
ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்குவதற்கு முன்னதாக எமது கட்சி தலைவர் சில கண்டிசன்களை போட்டதாக தெரிகிறது அவை அசாத் சாலியால் நிறைவேற்றப்பட்டதா என்பது அவருக்கும் தலைவருக்கும் இடையே உள்ள விடயம். அதேநேரம் அசாத் சாலிக்கு அரசியலில் முகவரிகள் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சிதான் அவரை உபமேயராக அழகு பார்த்ததும் மாகாண சபை உறுப்பினராக உயர்ந்தியதும் ஐக்கிய தேசிய கட்சியிதான் அதனை மறந்து அவர் செயற்படுவது தவறு.
நான் நானூறு சொற்ப வாக்குகளால் மாகாண சபையை இழந்தவன் பதவிகளை தருபவன் அல்லாஹ் எதுவித பதவிகளும் இல்லாமல் இருந்த போது ஆசாத் சாலி முஸ்லிம்களுக்கு குரல்கொடுத்தார் சமூகத்துக்காக குரல்கொடுக்க பதவிகள் தேவை இல்லை இம்முறை மத்திய மாகாண சபைக்கு என்னோடு முத்தலிப் ஹாஜியும் செல்கிறார் லாபிர் ஹாஜி,உவைஸ் ஹாஜி ஆகியோர் ஏற்கனவே மாகாண சபையில் உள்ளனர் நாம் அனைவரும் அசாத் சாலியுடன் ஒன்றிணைந்து சமூகத்துக்காக குரல்கொடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்

Your speech is so beautiful but it's not true. In Kandy Muslims could elect 4 members but UNP cut down that to 2,, we voted for azad saly. Rauf kakeem didn't do anything to kandy. Even he doesn't want to built a building to akurana balika school. Even he doesn't want to come to akurana. UNP waisted our votes inshaallah in two weeks it will be a mass rally in akurana.
ReplyDeleteஆசாத் சாலி உயிரையும் துச்சமாக மதித்து அராஜக ஆட்சிக்கொதிராக UNP சார்பாக நின்று குரல்கொடுத்தவர். அவர் தேர்தல்காலத்தில் UNP க்காக பாடுபட்டார். அவருக்கு பலரும் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளனர்.
ReplyDeleteமிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார் ஹிதாயத் சத்தார். குறுகிய மனம் படைத்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லீம்களை புறக்கணித்துள்ளது என்று சொல்வது உண்மையானால் அதன் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீமைதான் குற்றம் சுமத்துகின்றனர். அவரும் ஒரு முஸ்லிம் என்பதை மறந்துவிட்டு இப்படி குற்றம் சொல்கின்றனர்.
ReplyDeleteMohammed what you mean. What are you telling about 2 MP's instead of 4 MP's in kandy. Who tricked Muslims or UNP? If you don't know about this kind of politics shut up your mouth
Deletevery sensible, decent talk.
ReplyDeleteஉண்மையில் நல்ல கருத்தை கூறியுள்ளார் ஹிதாயத் சத்தார் அவர்கள்.நாம் கடந்த காலங்களையும் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும்.ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய மான பதவிகளை முஸ்லிம்களுக்கு வழங்கி வருகிறார்கள் A .C.S.HAMEED ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளராக இருந்தார்.ஆசாத் சாலி முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர்தான் அதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்ஷா அல்லாஹ் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் ஒரு வலியை துறந்தே ஆகுவான் அதில் சந்தேகம் இல்லை.
ReplyDeleteஹாரிஸ் பாய், ஜப்னா முஸ்லிம் தளம் ஜனனாயமானது என்ற எண்ணத்திலேயே எனது கருத்தை தெரிவிக்கிறேன். அசாத் சாலி கண்டியில் போட்டியிட்டு இருந்தால் வாக்குகள் பிரிந்து சென்றிருக்கும். ஒரு ஐந்து வருடம் (சில வேலை 2 வருடம்) அசாத் சாலிக்கு பொறுமையாக இருக்கமுடியாதா? ஏன் இந்த பதவி ஆசை?
ReplyDeleteசரி அகுரணையில் பிறந்து வளர்ந்தவர்கள் யாருமே இல்லையா கண்டி மாவட்டத்தில் போட்டியிட? அசாத் சாலியே தானா வேண்டும்? கபீர் ஹஷீம், ரவுப் ஹகீம் மீது உங்களுக்குள்ள பகைமையை நிவர்த்தி செய்ய அசாத் சாலி வேண்டும் என்கிறீர்கள்.
வாயை மூடு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. இது ஜனநாயக நாடு. எனது கருத்து துவேசத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அட்மின் அதனை நீக்கிவிடட்டும்.
As a converted Muslim girl my thoughts limited. It's up to you br mohamed. My point is in Kandy there are 150000 muslim voters it's not hard to elect 4 MPs
ReplyDeleteஉங்கள் குறுகிய மனப்பான்மை கண்டியை மட்டும் முழு நாடாக நினைப்பதாகும். இது ஜனநாயக நாடு என்பதையும் மறந்து பேசுகிறீர்கள். ஐக்கிய தேசிய கட்சிமேல் உங்களுக்கு உள்ள வெருப்பை இப்படி கக்குகிறீர்கள்.
ReplyDeleteஅனைத்து கட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் போட்டியிடவேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் நாங்கள் சிறுபான்மையினர். நாங்கள் ஒரு கட்சிக்கு மட்டும் எம்மை கட்டுப்படுத்திக்கொண்டால் எமக்கு எதிரான கட்சி வெற்றிபெற்றால் அநேக இன்னல்களை அனுபவிக்கவேண்டிவரும்.
இன்றைய பாராளுமன்றில் 21 முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இந்த 21 பிரதிநிதிகளும் கட்சி ரீதியாக பிரிந்திருந்தாலும் முஸ்லீம்கள் என்ற கொடையின் கீழ் ஒன்றுபட்டு செயல்பட்டால் 20 இலட்சம் முஸ்லீம்களுக்கும் நன்மை பயக்கும்.
அசாத் சாலிக்கு சீட் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடாத்தி நேரத்தை வீனடிப்பதைவிட இந்த 21 பிரதிநிதிகளை பயன்படுத்து இலங்கை முஸ்லீம்களுக்கு எப்படியான நன்மைகளை வென்றெடுப்பது என்று மகாநாடுகள் நடாத்துவதே மேலானதாகும்.