அமைச்சர்களை தெரிவுசெய்யும், நடவடிக்கையில் பிரதமர் ரணில் தீவிரம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக்கான அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஹரின் பெர்னாண்டோ, மலிக் சமரவிக்ரம. சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளது.
கரு ஜயசூரிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட உள்ளார். இதனால், அவரது பெயர் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment