Header Ads



புத்தளத்திற்கு தேசியப் பட்டியல், வரவேற்கப்பட வேண்டியது - NM. அமீன்

ஐக்கிய தேசிய கட்சி மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியலை, கடந்த பல வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்த புத்தளத்திற்கு வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கதென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கிலிருந்து புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு புத்தளத்தில் வாழ்ந்துவரும் வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள வளங்களை சுரண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் எம்.பி. பதவி புத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. றிசாத் பதியுதீன் மேற்கொண்ட இத்தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.

உடுத்த உடையுடன், திக்கற்று நின்ற வடக்கு முஸ்லிம்களை அதிகளவில் அரவணைத்து, உபசரித்த பெருமை புத்தளம் முஸ்லிம்களை சாரும்.

புத்தளம் மாவட்டத்திலிருந்து 2 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் அளவுக்கு அம்மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இருந்தபோதும் துரதிஷ்டவசமாக கடந்த பல வருடங்களாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்காமலே இருந்துவந்துள்ளது. அந்த கவலை தற்போது தீர்க்கபட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் புத்தளம் முஸ்லிம்களும், புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களும் கடந்த கால பகையுணர்வுகளை மறந்து வாழ்வதற்கான அரியசந்தர்ப்மாக இதனை பயன்படுத்தி எதிர்காலத்திண் இருதரப்பு பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்ய முன்வர வேண்டும் எனவும் என்.எம்.அமீன் மேலும் கூறினார்.

6 comments:

  1. அமீன் நானா, உங்கள் கருத்துடன் முற்று முழுதாக உடன்படுகிறேன்.

    கால் நூற்றாண்டுகளாக அகதிகளாக வாழும் வட மாகாண முஸ்லிம் மக்களைத் தமது நிலப் பரப்புகளில் இன்னமும் வைத்துப் பாதுகாக்கும் புத்தளத்து மக்களுக்கு இதயமுள்ள இலங்கை முஸ்லிம்கள் சார்பாகச் செய்யப்பட்ட நன்றிக் கடனாகவே இதனை நாம் பார்க்கிறோம். இந்த விடயத்தில் தேசியப் பட்டியல் பா.உ. பதவி தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தும் ஒவ்வொரு தனி நபரும் அல்லாஹ்வுக்காகத் திருப்தி கொள்வதுதான் நன்மை தரும்.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய அமீன் அவர்களே, ரிசாத் பதுர்தீன் அவர்கள் யாருக்கு என்ன வாக்குறுதி அளித்து விட்டு இந்த நியமனத்தை செய்துள்ளார் என்பதை அறியாமல் ஒரு பொது கருத்தை உங்களை போன்ற சமூக ஆர்வலர்கள் நியாயம் கூருவது, ஏமாற்று காரர்களையும், நயவஞ்சக காரர்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் இந்த தேசிய பட்டியலில் இருவரின் பெயர்களை அறிவித்து விட்டு தான் 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

    இரண்டு எம்பி பதவியை கிடைக்காமல் பிரிவினையையும் போட்டியையும் தனது பணத்தாலும், அரசியல் பலத்தாலும் இல்லாமல் செய்தவர் யார் என்று புத்தளம் பாயிசிடம் கேளுங்கள் உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும்.

    சகோதரர் அமீன் அவர்களே, உங்களது இந்த அறிக்கை ரிசாத் பதுர்தீனுக்கு அரசியால் அதாரவை தேடிக்கொடுக்க வேண்டும் என்றால் நேரடியாக அவரது கட்சியில் சேர்ந்து கொண்டு தாராளமாக நீங்கள் அரசியல் செய்யலாம். ஆனால் முஸ்லிம் கவுன்சில் தலைவராக இருந்து கொண்டு இப்படி அரசியல் பின்னணி உள்ள ஒரு விடயத்துக்கு நீங்கள் நியாம் கற்பிக்க முனைவது உங்களை ஒரு நடுநிலை நபராக நம்பும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. innum sattu poruththirunthu avathaaniththaal oru thuli neer kooda haram seraatha rishad in nayavanchahathan, poi vaakkuruthi ponra anaiththum viraivil ampalaththukku varum

    ReplyDelete
  4. நல்ல முடிவு , இருந்தாலும்கூட அரைவாசி காலங்களுக்கு அம்பாறைக்கும் கொடுக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் அ.இ.ம,கா ன் அம்பாறை வருகையும் , மக்களின் அபிமானத்தைப் பெறும்.

    ReplyDelete
  5. ஒட்டக கூட்டனிக்கு இரண்டு MP க்கள் எடுப்பதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருந்தன . அதேபோன்று அவர்களின் கொள்கையும் கோட்பாடும் மிகத்தெளிவாகவே இருந்தன. புத்தலத்திக்கும் புத்தள மக்களுக்கும் எது தேவையோ அவை அனைத்தும் PPAF வுடைய விஞ்சாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இவர்களுடைய கருத்தும் சிந்தனையும் கொள்கையும் மக்களை சென்றடைய பாரிய தடையாக இருந்தவர்தான் நவவி அவர்கள் .
    (ஆரம்பத்தில் ஒட்டகத்துடன் ஒட்டி இருந்தவர்தான் அவர், அதுமட்டுமல்ல கனமூலை சகோதரர் ஹனீபா இப்திகாரை ஒட்டகத்துடன் இணைந்து ஓட்டுக் கேட்கும் படி வற்புறுத்தி அவரை உள்ள கொண்டு வந்ததும் நவவி அவர்கள்தான், கடைசி தருணத்தில் எந்த ஒரு காரணமுமின்றி ஒட்டகத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். இல்லையென்றால் இன்று புத்தளம் இரண்டு முஸ்லிம் MP க்களை கண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.)
    ஆனால் இன்று ரிஷாத் அவர்கள் தனது கட்சிக்கு கிடைத்துருக்கும் தேசியள் பட்டியலில் நவவி அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததை வரவேற்கிறோம். கிழக்கு மாகாணங்களுக்கு தேவைக்கு மேல் முஸ்லிம் பாராள மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். புத்தளத்திற்கு ஒரு முஸ்லிம் mp இன்று இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்த அமைச்சர் ரிஷாத் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அதுமட்டுமல்ல இதைப் பெற்றுக் கொள்ளும் நவவி அவர்கள் புத்தளத்துக்கும் புத்தள மக்களுக்கும் சரியான முறையில் தன கடமையை செய்ய வேண்டும்.எனது கட்சி , எதிர்க் கட்சி என்று பாராமல் , கல்பிட்டியன் புத்தலத்தான் என்று பாராமல் , அல்லாஹ் தந்திருக்கும் இந்த அமானிதத்தை அவன் விரும்பும் முறையில் சேவை செய்ய வேண்டும்.
    (இறுதியாக , ஒட்டகக் கூட்டணிக்கு சொல்ல விரும்புவது , இந்த தேர்தலில் உங்களின் பலமும் , பலவீனமும் பாயிஸ் அவர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விட்ட தவறுகளை சீர் செய்து இந்த நல்லாட்சிக்கான உங்களின் சிந்தனை போக்கு வீரிய உற்சாகத்துடன் தொடர்ந்தும் செல்ல வேண்டும்.
    விழுவது ஒன்றும் தவறு இல்லை , விழுந்தவன் எழுந்து நிற்காமல் இருப்பதுதான் தவறு.

    ReplyDelete

Powered by Blogger.