Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு தேசியப் பட்டியல் கொடுத்ததை கண்டிக்கிறோம் - சிப்லி பாறூக்

(அ.றஹ்மான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்க கூடாது என்று நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை இரவு(21.8.2015) அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மைத்திரிபால சிறிசேனா அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக பல போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து எங்களது ஆதரவை வழங்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம்.

அந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று செயற்பட்டவர்கள். தங்களுடைய அந்த செயற்பாடு பலன்தராத நிலையில்; தற்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். நல்லாட்சியினூடாக பாராளுமன்றம் அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நல்லாட்சிக்கு விரோதமாக இருந்தவர்களை மக்கள் ஜனநாயக ரீதியாக தோற்கடித்தார்கள்.

அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு மக்களை ஏறமாற்றும் விதமாக ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்ற மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்யும் விதத்தில் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலுக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளே காத்தான்குடியிலும் அதனைச்சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களிலும் மிக மோசமான அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.
கடைகள் தாக்கப்பட்டுள்ளன. காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளன. தாறுள் அதர் அத்தவிய்யா பள்ளிவாயல்

முற்றுகையிடப்பட்டு அங்கு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்கள்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடைய நான்கு மாதக்கர்ப்பிணியை அடித்து தாக்கியுள்ளனர்.

இதைப்பார்க்கின்ற போது நல்லாட்சிக்காக பாடுபட்ட எங்கள் மீது நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அராஜகம் புரியுங்கள் என தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஒரு தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். உடனடியாக ஹிஸ்புல்லாஹ்வை தேசியப் பட்டியலில் இருந்து நீக்குவதன் ஊடாக ஜனநாயகத்தை வாழ வைத்தவர், நல்லாட்சியை உருவாக்கியவர் என்ற பெருமையை ஜனாதிபதி மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம்.

நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை கொடுப்பதுதை கண்டிக்கின்றோம். இது நல்லாட்சிக்கு எதிரான செயலாகும்.

ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. சிப்லி பாரூக், முதலில் உங்களது மாகான உறுப்பினர் பதவியை ராஜினமா செய்து விட்டு, உங்களது அரசியலை முன்னெடுங்கள் அப்போது தான் நீங்கள் நீதி நியாயம் பற்றி கதைக்க ஒரு தார்மீகம் உள்ளது.

    ஹிஸ்புல்லாவினதும் அவரது ஆதரவாளர்களினதும் வன்முறையை வன்மையாக கண்டிப்பதோடு, முஸ்லிம் காங்கிரஸ் இவர்களுக்கு எதிராக சட்டனடவேடிக்கை எடுப்பதோடு தனதும் அரசியல் பலத்தை மிகவும் முழுமையாக பாவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உடனடியாக கலவரம் நடந்த பகுதிக்கு சென்று அந்த மக்களின் பாதுகாப்பை உருதிப்படித்திக் கொள்ள வேண்டும். இனியும் தேர்தல் காலத்துக்கு மட்டும் தரிசனம் கொடுக்கும் தலைமை எமக்கு வேண்டாம்.

    ReplyDelete
  2. Mr Shibly. Have a bit of a common sense. Hisbullah may not be a honest man as alleged but a man who has and still doing many developments for Kattankudy. you and yor counterpart Mr Rahman has lost the election and for sure there wont be an MP from this area, at least having Hisbullah from nation list gives a MP for our people. so that we don't have to run to Tamil (hindu) MP to do something for Kattanakudy and its needs. You selfish Idiots just budded from yesterday rain drops coming to do politics. Learn politics first then come to contest elections. Have a bit of longer memory. Who was there for us when the mosques were attacked and LTTE run riot in our village.? well guys were wearing your nappy then. It was this man HISBULLAH is the one who stand for this village bringing STF and escorting injured to hospitals in Plonnaruwa. go and get some political education then come and do your politics you Muppet.

    ReplyDelete
  3. Adu isbu seythan ganja kopi power kativitargal m3 mistake panitaru

    ReplyDelete
  4. Mr.sibly don't forget that how you become a politician !

    ReplyDelete
  5. Mohamed Fous அவர்களே : நீங்கள் சொல்ல வருவது என்ன? ஊருக்கு ஒரு எம் பி வேண்டும் என்றா ? அப்படியானால் பாராளுமன்றத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசனங்கள் தேவைப் படுமே பருவாயில்லையா? அதாவது ஷிப்லி போன்றவர்கள் நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள். உங்கள் கருத்துப் படி, அரசியல் செய்வதாயின் வாழையடி வாழையாக அரசியலில் இருந்திருக்க வேண்டும், அவர்கள் எத்துணை கயவர்களாக இருந்தாலும் , எத்தனை கொள்ளையடிப்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, கூலிப்படையை ஏவி எத்தனை கும்பத்தை சூறையாடினாலும் பரவாயில்லை அனால் வாழையடி வாழையாக அரசியலில் இருந்திருக்க வேண்டும். புதியவர்களும், புத்தியுள்ளவர்களும் தப்பித்தவறியும் அரசியலில் நுழைந்து விடக்கூடாது. அப்படியே நுழைந்தாலும் அரங்கேறும் அட்டூழியங்களை பார்த்துக் கொண்டு ஊமை போல் பேசாமல் இருக்க வேண்டும். அப்படித்தானே ? காத்தான்குடியில் மக்கள் பயன் படும் விதத்தில் என்ன அபிவிருத்தி செய்தார், கொஞ்சம் பட்டியலிட முடியுமா? ஆனால் கொள்ளையடித்தது, அடுத்தவன் சொத்தை பிடிங்கியது என்று காத்தான்குடியிலுள்ள வயது வந்த எல்லோருக்குமே தெரியும், நீங்கள் லண்டனில் இருந்ததால் அறிந்திருக்க ஞாயமில்லை. “தமிழனிடம் நாம் போய் நிற்பதா” என்று கூறுவதிலிருந்து உங்கள் பிற்போக்குவாத சிந்தனையும் பிரிவினை வாத வெறியும் தெரிகிறது. இதனை நோக்கும் பொது வெட்கமாக இருக்கின்றது . இங்கிலாந்துக்குப் போனாலும்.......... நீங்களே இவ்வாறு சிந்திக்கும்போது இதே சிந்தனைவாதத்தை பெரும்பான்மை இனம் தூக்கிப் பிடிப்பதில் என்ன தவறிருக்க முடியும்? இதே சிந்தனைவாதத்தை தமிழர்கள் (உங்கள் பாணியில் இந்துக்கள்) தூக்கிப் பிடிப்பதில் என்ன தவறிருக்க முடியும்?
    “காத்தான்குடியில் பள்ளியில் நடந்த துயர சம்பவத்தின் போது பங்களிப்பு செய்தது யார் ? ஹிஸ்புல்லாதானே“ முட்டாள்தனமாக இருக்கின்றது உங்கள் கூற்று. அச்சம்பவத்தில் அவர் பங்களிப்பு செய்ததால் அவர் செய்யும் எல்லா அட்டூழியங்களும் அநியாயங்களும் வழுவற்றதாகி விடுமா? , அதற்காகவே அவரை தொடர்ந்து ஆட்சியில் அனுமதிக்க வேண்டுமா? அப்படியானால் மகிந்தவுக்கும் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கொடுக்கலாமே? புலிகளை அடியோடு அழித்து சாதனை படைத்தவராயிற்றே.. முதலில் அரசியல் யதார்த்தம் என்ன வென்று கற்றுக் கொண்டு அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்படுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.