JVP யின் முக்கிய 4 தலைவர்களை பதவிகளில் இருந்து நீக்கவேண்டும் - சோமவன்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் முகவராக செயற்பட்டமை காரணமாகவே ஜேவிபிக்கு பொதுத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபி மாத்திரமே இலங்கையின் முன்னணி சோசலிஸக்கட்சியாக உள்ளது. எனினும் அதன் கொள்கைகளை பின்பற்றாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்காக பணிகளை மேற்கொண்டதன் காரணமாகவே ஜேவிபிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எனவே இது ஆச்சரியமான விடயம் அல்ல. இந்ததருணத்தில் ஜேவிபியின் முக்கிய நான்கு தலைவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படவேண்டும்.
இந்த நிலையில் தேசிய அரசாங்கம் என்பது சாத்தியமற்றது. எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்தது என்று சோமவன்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment