Header Ads



இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு புறப்பட்டது

புனித ஹஜ் கடமைக்கான முதலாவது தொகுதி ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் எயார் விமானம் இன்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 2.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயண மாகவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார். முதலாவது தொகுதியில் சுமார் 217 ஹாஜிகள் மக்கா பயணிக்கவுள்ளனர்.

இவர்களை உத்தியோக பூர்வமாக வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று காலை 11.00 மணிக்கு விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் கவுன்சிலர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், ஹஜ்முகவர்கள், ஹஜ் குழு அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஹாஜிகளின் விமான சேவை இடம்பெறும். இலங்கையிலிருந்து சுமார் 2240 ஹாஜிகள் இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. யா அல்லாஹ் இவர்களின் உம்ராவையும் ஹஜ்ஜையும் அங்கீகரிப்பாயாக.குரானையும் சுன்னாவையும் பின்பற்றி ஹஜ் செய்ய இவர்களுக்கு அருள் புரிவாயாக.பித் அத் என்னும் வழிகேட்டை விட்டும் இவர்களை பாதுகாப்பாயாக,இவர்களுக்கு தேக ஆரோக்கியத்தை கொடுத்து ஹஜ்ஜுக்குரிய சகல கடமைகளையும் விடுபடாமல் செய்ய அருள் புரிவாயாக,இவர்களுக்கு கூலியாக சொர்க்கத்தை வழங்குவாயாக.எங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஹஜ் செய்ய அருள் புரிவாயாக அமீன்.

    ReplyDelete
  2. Aameen....aameen...aameen.....

    ReplyDelete
  3. ஹஜ்ஜை வயிற்றுப் பிழைப்பு வியாபாரமாக மாற்றிய ஹஜ் முகவாகளுக்கு நல்ல லாபத்தை கொடுப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.