Header Ads



"குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் பலர், மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு"

கடந்த தேர்தலில் தகுதியான வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய பொதுமக்கள் தவறியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு ஊடகங்களும், சிவில் அமைப்புகளும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை பார்க்கும் போது, வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக வேட்பாளர்களை தெரிவு செய்தார்கள் என்று எண்ண முடியவில்லை.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் பலர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப்படியானவர்களை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியிலும் காணமுடியும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.