தேசிய அரசாங்க ஒப்பந்தம், அலரி மாளிகையில் கைச்சாத்து - மகிந்த ராஜபக்ஸவும் பங்கேற்பு
சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பிரதமர் பதவியேற்பு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

At last all the thieves are together. No one will get punished.
ReplyDeleteThe losers are the people who voted them.
தன்னோட எதிர்த்து போட்டியிட்டுவேற்றிபற்றவர்களின் விழாவுக்கு ஒக்கும் ரோசம் ,மானம் ,சூடுசொரணை இல்லாத ஒரேஒரு மனித வடிவம் இந்த மகிந்ததான தூ எட்டா பழத்துக்கு கொட்டாவி விட மஹிந்த அங்கு போய் இருக்கார்போல.எப்படியாவது இன்னும் ஓரிரு வருடங்களில் பார்நிமண்டை கலைப்பதற்கான குழப்பங்களை ஏற்ப்படுத்தி தான் பிரதமராக வேண்டும் என்ற கனவுதான் மஹிந்தைக்கு இன்னும் இருக்கிறது
ReplyDeleteசெய்தி உண்மை ஆனால் தலைப்பு பிழை!
ReplyDeleteஅலரி மாலிகையில் கைச்சாத்தாகவில்லை. ஜனாதிபதி காரியாலயத்தில்...