இடதுசாரிகளின் குரல் இல்லாதொழிக்கப்பட்டு, திருட்டுத்தனமாக தேசிய அரசாங்கம் - டியூ குணசேகர
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இடதுசாரிகளை ஏமாற்றி விட்டதாக டியூ குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டியூ குணசேகர இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து திருட்டுத்தனமாக தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியுள்ளது. இதன் போது இடதுசாரிகள் முற்றாக புறக்கப்பணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவம் இதன் மூலம் இடதுசாரிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. ஜனநாயக அரசியலை கேலிக்கூத்தாக்கி விட்டுள்ளது. இது தீய சிந்தனையில் எடுக்கப்டப்ட்ட அரசியல் முடிவு.
இதன் மூலம் எட்டாவது நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரல் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எங்கள் மனவருத்தத்தை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றோம் என்றும் டியூ குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Edathu sarigal INI oil saree katikolungal Mr.dew
ReplyDelete