தேர்தலில் மகிந்த தரப்பின் துண்டுபிரசுரம் - தற்போது மைத்திரியை தலையிடுமாறு கோரிக்கை
சிறிலங்கா சுதந்திர கட்சி தூய்மையான, ஒழுக்கமுள்ள தேசிய அரசியல் கட்சியாக மாறும் என தாம் எதிர்பார்ப்பதாக சுதந்திர கூட்டமைப்பின் குருணாகலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் தெளிவான அரசியல் தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தகருத்தை முன்வைத்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
எந்தவொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் குறித்த ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கும் துண்டுபிரசுரம் அனுப்பப்பட்ட சந்தர்பங்கள் மிக அரிது.
பொதுத் தேர்தலின் பின்னர் மைத்திரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ரணிலின் தேசிய அரசியல் இணைந்து கொள்ள தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் குருணாகலை மாவட்ட வேட்பாளர் சாந்த பண்டாரவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை விடுக்கும் பிரசுரத்தை, குருணாகலை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெளியிட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment