முஸம்மிலுக்கு ஆப்பா..?
விமல் வீரவன்சவின் தேசிய முன்னணியில் உள்ள குழுவொன்று அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் செயற்படுவதற்கு ஆயத்தமாவதாக தெரியவந்துள்ளது.
கட்சியினுள் தனிப்பட்ட கருத்திற்கு செயற்படுகின்றமையும், பொது தேர்தலின் போது கட்சியின் வெற்றிக்கு பதிலாக தனது தனிப்பட்ட வெற்றிக்காக செயற்பட்டதாகவும் அவர்கள் வீரவன்ச மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
விமலுக்கு எதிராகும் குழுவின் பிரதானியாக இருப்பது தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் என தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமையும், முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக அமைச்சு பதவிகள் பெற்று கொடுப்பதாக உறுதியளித்து விட்டு அதனை நிறைவேற்றாமையினால் மொஹமட் முஸ்ஸமில் கடுமையான மன வருத்தத்தில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நான் நிச்சியமாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருப்பேன் என மொஹமட் முஸ்ஸமில் தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தலைவர் வேண்டுமென்றே தனது வாய்ப்பை மறுத்து விட்டார் என அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேசிய சுதந்திர முன்னணிக்காக ஊடகங்களுக்கு முன்னால் மொஹமட் முஸ்ஸமில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Avan oru thalaivan...nee oru servant...uruppadumda saami...
ReplyDeleteyou dont think..you are boolshit and talking non-sense...??
அரசியலில் அனைவருமே சுயநமிகள்.
ReplyDeleteரணிலோ சந்த்ரிகாவோ விதிவிலக்கல்ல.
நான் விசாரித்த வரையில் இது உண்மையற்ற செய்தியாகவே உள்ளது. விமலின் முன்னணி பொளத்தர் மட்டும் என்ற சிந்தையுடையது. ஆனால் அதன் மூத்த தலைவர்களுல் ஒருவரான முஸ்ஸமிலுக்கு மட்டும்தான் அதில் அங்கம் வகிக்க முடியும். அவருக்கு கீழ் ஒரு முஸ்லிமாவது அதந்த கட்சியில் பதவிகள் எதுவும் வகிக்க முடியாதுள்ளது. முஸம்மில் வெளியேறினால் அவரின் அரசியல்வாழ்க்கை அதோ கதிதான்.
ReplyDeleteஅவர் கண்டியில் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதை நன்றாக அறிந்தே விமல் அவருக்கு தேசிய பட்டியலில் சேர்த்தார். அவரின் கெட்ட நேரம் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ippayada uunamku poothi varvuthu
ReplyDeleteஒரு ஹதீஸ் உண்டு எவரொருவர் யவருடைய திருப்தியை நாடி அவருடன் மற்றவர்களை பகை உண்டு பன்னுகிரானோ இவனையும் அவனையும் அல்லாஹ் பகையாக்கி விடுவான்.திருப்திக்கு பதிலாக எதிர்ப்பே வரும் .இலங்கையில் ஒண்ணா நம்பர் இனத்துவேசவாதி விமல் வீரவங்க்சையின் திருப்தியை எதிபார்த்து முஸ்லிம்களை பகையாகிய முசம்மில்.இப்போ அவர்கள் இரண்டுபேரையும் அல்லாஹ் பகையாக்குகிரான்.காட்டிகுடுத்தவனும் கூட்டிக்கொடுத்தவனும் நல்லா வந்த வரலாறே கிடையாது சூட்சி சைபவர்க்கல்லாம் மிகப்பரிய சூட்சியாளன் அல்லாஹ் .என்பதை எல்லோரும் புரிய வேண்டும்.
ReplyDeleteமுஸ்தபா ஜவ்பர், நான் உங்கள் கருத்துக்களை விரும்பி வாசிப்பவன். இந்த கூற்றில் ஒரு சிறு திருத்தத்தை செய்ய விரும்புகிறேன். விமல் வீரவன்ஸவை முகபுத்தகத்தில் எதிர்ப்பவர்களில் (சிங்களத்தில்) நானும் ஒருவன். அவர் பேஜில் என்னை கமென் இட முடியாதவாறு முடக்கியுள்ளான். ஆனால் அவன் முஸ்லீம்களுக்கு எதிரானவன் அல்ல. வஹாபிஸத்துக்கு எதிரானவன். அவதற்கு காரணம் அவன் பார்வையில் அது 80 களுக்கு பின் வந்த இஸ்லாம். அதை தீவிரவாதமாக அவன் (அவனுக்குள்ள அறிவு படி) பார்க்கிறான்.
ReplyDeleteஅவன் கட்சி பௌத்த இனவாத கொள்கையுடைய கட்சிதான். அதில் மாற்று கருத்து கிடையாது. அவன் ஒரு பொய்யன் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் முஸ்லீம்களை அழிக்க உருவான பொதுபல சேனா போன்ற இயக்கங்களை பகிரங்கமாக விமர்சித்தவன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஒரு தனி நபராக முஸ்லீம்களும் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று நினைப்பவன்தான் விமல் வீரவன்ஸ.
Jaffnamuslim is a liar.. kulappavazi
ReplyDeleteMOHAMED உங்களிடம் நன் ஒரு கேள்ளவி கேட்க விரும்புகிறேன்.வஹாபி என்றால் என்னஅதன் கொள்கை உங்களைப்பொருத்த வரையில் உங்கள் கருத்து என்ன? அவர்கள் யார்?தயவு செய்து பதில் தாருங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன்.
ReplyDeleteமுஸ்தபா உங்களுக்கு வஹாபி என்றால் என்ன என்று தெரியாமல் கேட்கின்றீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது எமது வீட்டு பிரச்சினை அதனை வீதிக்கி கொண்டுவராமல் இருப்பதையே நான் விரும்புகிறேன். இலங்கை முஸ்லீம்கள் என்ற கொடையின் கீழ் நாங்கள் ஒன்று படவேண்டும் என்ற கொள்கையில் நான் உள்ளேன். வஹாபியா இந்தால் என்ன, சூபியாக இருந்தால் என்ன. சுன்னியாக இருந்தால் என்ன, ஷீஆவாக இருந்தால் என்ன. இலங்கை முஸ்லீம்கள் என்றே மாற்றுமத சகோதரர்கள் எம்மை பார்க்கிறார்கள். அதையே நான் வரவேற்கிறேன்.
ReplyDeleteஇலங்கை முஸ்லீம்கள் ஒரு உம்மத். அதில் கொள்கை ரீதியில் பிரிவுகள் இருந்தாலும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டே ஆகவேண்டும்