Header Ads



"நாகப்பாம்புகளும் அவற்றின் விசமும், பௌத்த சிங்களவர்களிடம் எடுபடவில்லை"


-நாகூர் ழரீஃப்-
நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவுகள் நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற பெரும்பாலான மக்களின் அபிலாசையாக அமைந்திருந்ததை நிரூபித்துவிட்டது எனலாம்.
இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதற்கு சில அரசியல்வாதிகள் திட்டமிட்டிருந்தனர். எனினும் மனிதநேயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மனிதர்கள் கூட்டம் ஜனநாயகம் என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து இவர்களுக்கு, இனவாதத்தினதும் சாக்கடைச் சிந்தனையினதும் கீழ்த்தரம் இக்காலத்திற்கு பொருத்தமானது அல்ல என்று சரியான பாடத்தினைக் கற்பித்துள்ளனர்.
நாகப்பாம்புகளும் அவற்றின் விசமும் இக்காலத்து மனித நேயங்களிடம் இடம்பிடிக்க முடியாதவை என்பதை அதன் சேனாக்களுக்கு பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து உரத்த குறளில் சொல்லிக்காட்டியுள்ளனர்.
சமயம் என்று வேறுபட்டாலும் தேசம் என்று ஒன்றிவைதை இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, எமது தாயகத்தின் அமைதி, சமாதானம், முன்னேற்றம் போன்றவற்றில் பெரும்பங்காற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
ஊருக்கொரு அமைச்சர் வேண்டும் என்ற பிரதேசவாதமும் இனவாதத்துக்கக் குறைவில்லாத ஒரு வாதமாகும் என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.
இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் இம்முறையும் தெரிவாகியுள்ள நிலையில் நாம் இனவாதிகள் என்ற முத்திரை குத்திக்கொள்ளாது, தேசத்துக்கும் சமூகத்துக்கும் ஒன்றுபட்டு உழகை;க முன்வரவேண்டும்.
குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் குறைகளைக் கண்டறிந்து செயலாற்ற முன்வருவதுடன், கடந்த தேர்தல் காலங்களில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பிக்கொள்ள வேண்டியதும் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்காக தொடர்ந்து பயணிக்கும் பாதையில் உத்வேகத்தைத் தரும். 

6 comments:

  1. நாக பாம்பு சார பாம்பாக மாறிவிட்டது. இல்லை இல்லை,மன்புளுவாக மாறிவிட்டது.வரும்காலத்தில் இவன் எல்லா வழக்குகளிலும் மாடிகொல்வான்.

    ReplyDelete
  2. muslims must thank humbly our majority brothers and sisters and appreciate their rejection of BJP and to make sure the celebration of the fall of BJP must not hurt the feelings of those good people.

    ReplyDelete
  3. இனவாதம் பிரதேசவாதம் மட்டுமல்ல மத அடிப்படைவாதம், மதப்பிரிவு அடிப்படைவாதம் போன்ற இன்னோரன்ன பிற்போக்கான கருதுகோள்கள் அனைத்தும் படிப்படியாகவேனும் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் சென்றுதான் தீரும்.

    ReplyDelete
  4. what we, sought the almighty ALLAH, all our Duaa was not failed. this is the proof of all are to be known pls

    ReplyDelete
  5. Intha neraththil Muslimgal nizanamaga sinthippazu avasiyam. Anegamana maawattangalil viruppu vaakkugal azigam petravargal ellorumey indha naagap
    paambai uruvaakkiyavargal enbazai maranthuzida veyndam ! Muslimgalukku
    eziraaga naattin naalaa pakkangalil irunthum inaththuveshigalukku vaakkugalai alli
    kottiyirukkiraargal. Inappirachchinaigalil Ranilukku thalaiyidi kodukkap pozumana
    palam parliament ulley vanthu vittazu !

    ReplyDelete
  6. இனவாதம் நம்மவர்களிடம்தான் அதிகம் உள்ளது உதாரணத்திற்கு வைத்தியசாலையில் மருந்து எடுக்க சென்றால் ஒரு முஸ்லிம் வைத்தியருக்கு கொடுக்கும் மரியாதையையும் ஒரு சகோதர வைத்தியர் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் பாருங்கள் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஜப்னா இணையத்திற்கு ஒரு அன்பான வேண்டுக்கோள் பௌத்த சிங்களவர்கள் என்ற வாசகத்தை தவிர்த்து சகோதர சமூகம் என்ற வார்தையினால் அவர்களையும் அரவனைத்துக்கொளலவது சிறப்பாக அமையும்

    ReplyDelete

Powered by Blogger.