இலங்கையின் தேர்தல் முடிவுகள், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழி - பிரான்ஸ்
தேர்தல் முடிவுகள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும் என பிரான்ஸ் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கைத் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமை மேம்பாடு மற்றும் இன நல்லிணக்க முனைப்புக்களில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மிகவும் அமைதியானதும் சுமூகமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் புதிய அரசாங்கத்தி;ற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment