Header Ads



ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்பு - புதிய அமைச்சரவையும் அமைக்கப்படுகிறது


பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவிப்பிரமானம் செய்துக்கொள்ள உள்ளார்.

அதுபோல் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் நாளைய தினம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை h fm செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

தேர்தலில் பெற்றிப்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை சந்தித்தித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 113 உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்றுக்கொள்வதன் பொருட்டு உரிய தரப்பினருடன் தற்போதைய நிலையில் பேச்சு வார்த்தை  ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 113 பெறும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் குறிகிய கால அவகாசாத்தின் பொருட்டு கட்சி பேதமின்றி பொதுத் தேவைப்பாடுடன் செயற்பட வேண்டிய அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாவனெல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.