Header Ads



''வாசிம் தாஜூடீனின் படுகொலையை, அனுரசேனநாயக்க மூடிமறைத்தார்''

முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா- அதிபர் அனுரசேனநாயக்க, இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீனின் படுகொலையை மூடி மறைக்க முயன்றதாக தன்னை இனம்காட்டவிரும்பாத முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ஓருவர் கொழும்பின் ஆங்கில வாரஇதழ் ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர் ஏன் ரக்பி வீரர் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மறைத்து அது ஓரு விபத்து போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார் என்பது குறித்து விசாரணை செய்யவேண்டும்,

ரக்பி வீரர் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்கள் பல காணப்பட்ட போதிலும், அனுர சேனநாயக்காவின் உத்தரவின் பேரில் நாரஹன்பிட்டி பொலிஸார் உரிய விதத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற வேளை நான் இலங்கையில் இருக்கவில்லை, எனினும் நான் அது குறித்த விபரங்களை உன்னிப்பாக அவதானித்து வந்தேன், விபத்து ஓன்றில் மரணம் ஏற்பட்டால், பொலிஸார் நீதவானை அழைத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே சட்டம், எனினும் பொலிஸார் இதனை பின்பற்றவில்லை.

எனினும் அவர்கள் உடனடியாக வாகனத்தை அந்த இடத்திலிருந்து அகற்றி, ஆதாரங்களை அளிப்பதற்காக அந்த இடத்தை சுத்தம்செய்தனர் என முன்னாள் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Justice must be done! The Ranil administration will do this.The culprits can't escape!

    ReplyDelete
  2. Read the article, at 1st you try hide the person, but at the end you say his identity.

    Jaffna M has to correct a lot in its media life.

    ReplyDelete
  3. யுனிபோர்மை கழட்டிப்போட்டு .வாங்குவாங்கிண்டு வாங்கினால் எல்லாம் வெளிவரும் கொலைகாரனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு .

    ReplyDelete

Powered by Blogger.