தோல்வியடைந்தவர்களின் புலம்பல்
ஜனாதிபதி மைத்திரி தரப்பின் சதிவேலைகள் காரணமாகவே பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேர்ந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் ரோசி சேனநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் வாக்குகளால் முடியாமல் போன நிலையில் தேசியப் பட்டியல் மூலமாகவேனும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்குக் கிடைக்காமல் போனதற்கும் ஜனாதிபதி மைத்திரியை குற்றம் சாட்டும் அவர், தனது சீடர்களை நாடாளுமன்றத்தில் அமர்த்தி அழகு பார்க்க ஜனாதிபதி அரசியல் சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டபோதும் மோசடி வேலைகள் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ள ரோசி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நீதிமன்ற உத்தரவு பெற்று விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரிக்கை வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவர பாடுபட்ட தாங்கள் வெளியேறி , நேற்று வந்தவர்கள் இன்று கட்சிக்குள் தலைதூக்கி இருப்பதாகவும் ரோசி சேனநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் பொதுமக்களின் பிரச்சினைகளில் அவர்களோடு இணைந்து செயற்பட்ட தான் ஒருபோதும் வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே தோல்வி நிலையில் இருந்த சம்பிக்க ரணவக்கவை பாதுகாப்பதற்காக எதிராளிகளால் தனது விருப்பு வாக்குகள் திருடப்பட்டதாக ஐ.தே.க.வின் இன்னொரு வேட்ளபாளரான உபுல் சாந்த சன்னஸ்கலவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ரோசி சேனாநாயக்க நான் மிகவும் மதிக்கும் ஒரு தலைவி. தோழ்வியின் பின்பு அவரின் நடவடிக்கையை வேதனை தரக்கூடியதாகவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தோல்வியின் அடித்தளத்திலிருக்கும் போது அதனை நிமிர்ததி அழகு பார்த்தவர்களின் ரோசியும் ஒருவர். அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்காக தனது தோழ்வியை ஏற்க மறுத்து, நீதிமன்றம் சென்று கட்சி தலைமையுடன் முரன்படுவது அவரின் எதிர்கால் அரசியலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
ReplyDeleteமீண்டும் வாக்குள் எண்ணப்பட்டு அவர் வெற்றிபெற்று பாராளுமன்றம் வந்தால் கொழும்பில் தெரிவான 11 பேரில் ஒருவர் வீடு திரும்ப நேரிடும். அநேகமாக மனோ கனேசனாகதான் இருக்கும். அப்படியானால் கொழும்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் தெரிவான ஒரே தமிழர் அவர். அவரும் வீடு சென்றால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.
அதற்கு பொறுப்புகூறவேண்டிவரும் ரோசிக்கு.
ரோசி விட்டுக்கொடுத்தால் தொடர்ந்தும் மக்கள் மனங்களில் மகாராணியாக வாழலாம்.