பாராளுமன்றத்தில் தினேஷ் தலைமையில் புதிய அணி - மகிந்த, விமல், வாசு ஆதரவு
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்க தீர்மானித்திருக்கும் தேசிய அரசாங்கத்திற்கு, நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியுள்ள 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.
அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி உறுப்பினர்களாகும்.
தினேஷ் குணவர்தனவின் தலைமைத்துவத்திலான, மக்கள் ஐக்கிய முன்னணியை சேர்ந்த மூவர், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஐவர், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில ஆகிய பத்து பேர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 11 பேரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த உறுப்பினர் குழு நாடாளுமன்றில் தனியான ஒரு முன்னணியாக செயற்படவுள்ளதோடு, அதன் தலைமைத்துவம் மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

go...go....gone.....
ReplyDeleteஇது ஒரு நல்ல முடிவு. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொடுக்க மகிந்த தரப்பினரால் முடியுமாக இருக்கும்.
ReplyDelete