சுதந்திர இலங்கையின் 22 ஆவது, பிரதமர் ரணிலின் நிறைவேறாத ஆசை
இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளராக பணியில் ஈடுபட விரும்பியிருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமது குடும்பத்தினருக்குச் சொந்தமான லேக்ஹவுஸ் நிறுவனம் 1973 ஆம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டதையடுத்து ஊடகவியலாளராகும் எண்ணத்தை கைவிட்டு அரசியலில் ஈடுபடுவதற்கு அவர் தீர்மானித்திருந்தார்.
66 வயதான ரணில் விக்கிரமசிங்க, ஏற்கனவே 3 தடவை பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வரலாற்றில் அதிகூடிய விருபபு வாக்குகளை பெற்ற பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment