Header Ads



நாங்கள் தோல்வியடைய மகிந்தவே காரணம் - மைத்திரியிடம் முறையிட்ட முன்னாள் அமைச்சர்கள்

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, திலங்க சுமத்திபால, பியசேன கமகே, விஜயமுனி சொய்ஸா, ஜகத் புஷ்பகுமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த அனைவரும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை சந்தித்து தங்கள் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்சவினால் மேற்கொண்டு செல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியி்ன் பிரச்சார நடவடிக்கையின் முறை காரணமாக தான் உட்பட குழுவினர் தோல்வியடைந்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

2 comments:

  1. மஹிந்த சொன்னாலும் யார் சொன்னாலும் நீங்கள் மக்கள் மத்தியில் நேர்மையாக நடந்து இருந்தால் ஏன் இந்த கெதி உங்களுக்கு.

    ReplyDelete
  2. Voters voted according their knowledge and consciousness so it's. Not of mr

    ReplyDelete

Powered by Blogger.