மஹிந்த தலைமையில் கலந்துரையாடல் - தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய குழுவினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், கலந்துரையாடலில் இணைந்து கொண்டு உறுப்பினர்களிடம் இருந்து தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொள்ளவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment