Header Ads



விமல் வீரவன்சவுக்கு முன்னேற்றம்

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை தேர்தலில் களமிறங்கினர்.

தேசிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து நாடளாவிய ரீதியில் 11 பேர் மட்டுமே களமிறக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஐவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

விமல் வீரவங்ச (கொழும்பு), வீரகுமார திசாநாயக்கா (அநுராதபுரம்), நிரோஷன் பிரேமரத்ன (மாத்தறை), ஜெயந்த சமரவீர (களுத்துறை), பத்ம உதயசாந்த (மொனராகலை) ஆகியோரே இம்முறை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.

3 comments:

  1. கவிழ்ந்த கப்பலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ எனும் மிதப்புக்கட்டையைப் பிடித்துக்கொண்டு இனவாதம் எனும் உழுத்துப்போன தோணியில் ஏறியிருக்கின்றீர்கள். எத்தனை காலம் இனவாதம் கைகொடுக்கின்றது என்று பார்ப்போம்..

    ReplyDelete
  2. மிதப்புக் கட்டையுடன் உழுத்த தோணியும் நல்லாட்சி வெள்ளத்தில் மூழ்கி மூர்ச்சையாகத்தான் போகிறது சகோதரியே

    ReplyDelete

Powered by Blogger.