Header Ads



''செயலாளர்களுக்கு தடை'' தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து இன்று கட்சி பிரதிநிதிகள் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தமது கடமைகளை தவிர்க்க வேண்டும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடைக்கால தடை உத்தரவு விடுத்திருந்தது.

இதன்படி, சுதந்திர கட்சியின் பதில் பொதுச்செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், கூட்டமைப்பின் பதில் பொதுச்செயலாளராக கலாநிதி விஸ்வா வர்ணபாலவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து கட்சியின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டை தெளிவூட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.