Header Ads



இணக்கப்பாடு எட்டப்படாமையால், அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டது

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைச்சுப் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாமை காரணமாகவே பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 27ம்திகதி ஒரு தொகை அமைச்சர்களும், அதற்கடுத்த தொகுதி அமைச்சர்கள் 28ம் திகதியும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றம் கூடிய பின்னர் நாடாளுமன்ற அனுமதியுடன் அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன் பின்னர் மூன்றாவது தொகுதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு செப்டம்பர் முதலாம் வாரத்தில் நடைபெறவுள்ளது.

1 comment:

  1. ஆக "பழைய குருடி கதவைத்திறடி" தான்
    "யஹபாலனை" "வினய" எல்லாமே ஏமாற்று தானா?

    ReplyDelete

Powered by Blogger.