Header Ads



UNP வசமிருந்த ஊவா மாகாணம், UPFA வசம் - சசிந்திர ராஜபக்ஷ முதலமைச்சர்..?

-TM-

ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்த ஊவா மாகாண சபை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் மீண்டும் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊவா மாகாண சபை  முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊவா மாகாண சபையின் தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண அமைச்சர் ரவி சமரவீர, மாகாண அமைச்சர் ஜே.எம்.குமாரதாச, சபை உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க, பத்மலால் குணசேகர ஆகிய அறுவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 

இந் நிலையில், அவர்களின் வெற்றிடத்துக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களை தம்வசம் இழுத்தே அந்த மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாகாண சபை தேர்தலில், ஊவா மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது. இதற்கமைவாக , ஊவா  மாகாண சபையின் எதிர்க் கட்சித்  தலைவராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். 

எதிர்க்கட்சி தலைவாரான ஹரின் பெர்னாண்டோவை மாகாண முதலமைச்சராக்குவதற்கு சத்திய கடதாசி மூலம் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் சிலர் ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர் ஊவா மாகாண முதலமைச்சரானார். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஊவா மாகாண சபை ஐ.ம.சு.கூ வசம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாகாண முதலமைச்சராக சசிந்திர ராஜபக்ஷவும் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சி உள்ளிட்ட ஏழு அமைச்சுகளுக்கு பொறுப்பாக செந்தில் தொண்டமானும் ஊவா மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர் 

No comments

Powered by Blogger.