"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்"
-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -
தேசிய பட்டியல் செய்திகள் இலங்கை அரசியல் களத்தில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல பேரும் தேசியப்பட்டியலில் ஏமாந்து போயுள்ளது தெளிவாகத்தெரியும் ஓன்று. அதிலும் சிறுபான்மை பிரதிநிதித்து வத்தை சரியாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்ற குறை பரவலாகவே காணப்படுகின்றது. இரண்டு பிரதான கட்சிகளும் தமது தேசியப்பட்டியலை வெளியிட்டுள்ளன. நிலையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் வழங்கும் என எதிர்பார்த்து இருந்த அவரிட்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இலவு காத்த கிளியாய்ப் போயிற்று .
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் ”இட்ஸ் கண்டிஷனல்”’ என பதில் அளித்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே பிரதமர் கூறிய கண்டிசன் என்ன என்பதும் , அசாத் சாலி அவர்களினால் நிறைவேற்றப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் தெரிய வரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காத போது சுயேட்சையாக போட்டியிட தயாரானார். ஆனால் அதற்கு பின்னர் பிரதமருடன் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் UNP இற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இது போல் UNP சார்பாக எந்தவொரு முஸ்லிமும் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்டுள்ள மூவரும் ஏனைய கட்சிகளை சார்ந்தவர்கள்.
இந்தத் தேர்தல் பெறுபேறுகளை நோக்குமிடத்து முஸ்லிம்களில் 95%அதிகமானவர்கள் UNP இற்கே வாக்களித்து உள்ளனர். முஸ்லிம் மக்கள் வாக்குகளினால் பல மாவட்டங்கள் UNP வசமானது. ஆனால் அதற்கு பிரதி உபகாரமாக எந்தவொரு உறுப்பினரையும் தேசியப்பட்டியலில் நியமிக்க முன்வராதது ஆற்றைக்கடக்கும் வரை அண்ணன் தம்பி கதை போல் தான் இருக்கின்றது.
பல மாவட்டங்களில் பட்டியலில் அடுத்து நிற்பவர் முஸ்லிம் வேட்பாளர். அதைப் போல் கொழும்பு முஸ்லிம்கள் தலைவர் ரணிலுக்கு விருப்பு வாக்கு வழங்கியதால் பெரோசா முசம்மிலை இழந்தனர். சிறுபான்மை மக்கள் என்றும் தமது பிரதிநிதித்துவத்தை கூட்டும் படியாகவே வாக்களிக்க வேண்டும். அது எவ்வாறு என்பதை ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
சுதந்திரக்கூட்டமைப்பு தனது பட்டியலில் மூன்று முஸ்லிம்களை சிபாரிசு செய்துள்ளது பாராட்டுக்குரியது. தனக்கு முஸ்லிம் மக்கள் மிகக் குறைவாகவே வாக்களித்து இருப்பது தெளிவாகத் தெரிந்தும் முஸ்லிம்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ள நபர்கள் முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியல் சேவையாற்றியவர்கள் எவருமில்லை. அதேபோல் அவர்கள் கட்சியை முஸ்லிம் மக்களிடத்தில் பிரபல்யப்படுத்துவதற்கும் எதுவுமே செய்யவில்லை. ஆனால் எப்படியோ பாராளுமன்றம் செல்வதும் அவர்களுக்கு நியமனம் வழங்கியதும் பாராட்டுக்கு உரியது.
ஓன்று மட்டும் உண்மை, சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் அரசியலில் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. இனவாதம் இன்னும் இலங்கை நாட்டில் மறையவில்லை. பெரும்பான்மை எம்மை சமமாக பார்க்கும் காலம் வரும் வரை எமது இருப்பை பலப்படுத்திக்கொள்ளும் கைங்கரியத்தில் நாமும் ஈடுபட வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பால் சமூகத்தை முன்னணியில் வைத்து செயல்படவேண்டும். அது இலகுவான காரியமுமன்று.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்

mujibur rahman,marikkar,rauff hakeem.haleem, rishard ,all of them became qulified to parliament by UNP PARTY?ALHAMDULILLAH this people can do good job in the future.,
ReplyDeleteAppo ne'er Rauff Hakeem I'll athirupthi. Athanal pirinthu ACMC amaitheer. Ippo umathu secretary ummil Athirupthi. Athanal aval YLCMC amaipparu. Ellam pathavi mohamthan.
ReplyDelete