Header Ads



பாராளுமன்றம் செல்லும், வயது குறைந்த பெண் நான்தான் - ஹிருனிகா

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை இல்லதொழிக்கவே தாம் நாடாளுமன்றம் செல்வதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்றிற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு காணப்பட்டது. உண்மையில் அது அவ்வாறு நடந்தேறியது அது மிகப் பெரிய பாக்கியமாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் நான்தான் நாடாளுமன்றம் செல்லும் வயது குறைந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராவேன்.

ரவி கருணாநாயக்க, சுஜீவ சேனசிங்க, ஹர்ச டி சில்வா போன்ற சிரேஸ்ட உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்யும் போது நான் அரசியலில் கால் பதித்து இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட பூர்த்தியாகவில்லை.

கொழும்பு போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதே எனது ஆவலாக அமைந்துள்ளது.

மேலும் கொழும்பில் காணப்படும் வளங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட வகையிலேயே மக்களுக்கு கிடைக்கின்றது. கொழும்பில் மூன்று வேளை சாப்பிட வசதியற்றவர்கள் இருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மக்களுக்கு அதி உச்ச சேவையை வழங்குவதே எனது நோக்கம் என கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ள ஹிருனிகா பிரேமசந்திர கொழும்பு ஊடகமொன்றுக்கு தனது எதிர்கால திட்டங்கள் குறித்து செவ்வியளித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.