இரத்தினபுரி தேர்தல் முடிவில், வியக்கத்தக்க அம்சங்கள்
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு வியக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நிவத்திக்கல தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. அமைப்பாளர் திருமதி தலதா அத்துக்கோரளவும் ஐ.ம.சு.கூ. அமைப்பாளர் பிரேமலால் ஜயசேகரவும் ஒரு இலட்சத்திற்கு மேல் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் 11 என்ற ஒரே விருப்பு எண்களைக் கொண்டவர்கள்.
இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் ஏ.ஏ.விஜேதுங்கவும் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமைப்பாளர் ஜோன் செனவிரட்னவும் வெற்றி பெற்றுள்ளதுடன் இவர்கள் இருவருக்கும் விருப்பு எண் 8 ஆகும்.
இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் ஹேசான் வித்தானகே மற்றும் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமைப்பாளர் ரஞ்சித் டி சொய்சாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை ரஞ்சித் டி சொய்சாவின் விருப்பு இலக்கமும் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாரட்ன பரண விதாரணவின் விருப்பு இலக்கமும் ஒன்பதாகும்.
பலாங்கொடை மற்றும் கொலன்ன தேர்தல் தொகுதிகளில் ஐ.ம.சு.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. சார்பாக எவரும் வெற்ற பெறவில்லை.
இது இவ்வாறிருக்க பெல்மதுளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற துனேஸ்கங்கந்த மற்றும் ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற வாசுதேவ நாணயக்காரவின் விருப்பு இலக்கம் 12 ஆகும்.
பெல்மதுளை தேர்தல் தொகுதியில் வசிக்கும் திருமதி தலதா அத்துக்கோரள ( ஐ.தே.க.), திருமதி பவித்திரா வன்னியாராச்சி ( ஐ.ம.சு.கூ.), தினேஸ் கங்கந்த ( ஐ.தே.க), கருணாரட்ன பரண வித்தாரன ( ஐ.தே.க.), ஜோன் செனவிரட்ன ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சிறைச்சாலையிலிருந்து பலர் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் இம்முறை ஐ.தே.க. சார்பாக போட்டியிட்ட பிரேமலால் ஜெயசேகர 1,54,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.

Post a Comment