Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியினால், தனித்து செயற்பட முடியாது - நிமால் சிறிபால சில்வா

நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து செயற்பட முடியாது என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றில் எமக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மீது விசேடமான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்த நிச்சயமற்றத்தன்மை முதல் சில காரணிகளினால் தேர்தலுக்கு பிரவேசிக்க கால தாமதம் ஏற்பட்டது.

அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக இதனைவிட நல்ல பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
சிலர் நாம் இரண்டாக பிளவடைந்துவிடுவோம் என நினைத்தார்கள் அவ்வாறானவர்களின் கனவு பலிக்கவில்லை.

இந்த முடிவுகளின் அடிப்படையில் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.

நல்லாட்சி பற்றி பேசிய ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு வழிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீது அழுத்தங்களை பிரயோகித்தது.

நல்லாட்சி முன்னெடுக்கப்படுகின்றதா என்பதனை நாம் உன்னிப்பாக அவதானிப்போம்.

ஒரு கூறு வெற்றிலை 30 ரூபா ஒரு கிலோ நெல் 22 ரூபாவாகும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. குறைந்த விலையில் மக்கள் உணவுகளை வாங்கிக்கொள்ளட்டும்.தாராளமாக உண்ணட்டும்.புற்று நோயை உண்டுபண்ணும் வெற்றிலை கூறு ஆயிரம் ரூபா போனால்தான் நமக்கன்ன.

    ReplyDelete
  2. சப்பாத்துக் காலினால் உதைபட்டு சில்லுமூக்கு உடைந்து இரத்தம் கொட்டினாலும் வலியை மறைத்துச் சிரித்துக்கொண்டே, 'ஆஹா என்ன ஓர் அழகான உதை' என்று கூறும் நிமால் சிறிபால டீ சில்வா.. நீங்கள் உண்மையிலேயே சிறந்த நடிகர்தான் ஐயா!

    இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பியுங்களேன்.

    ReplyDelete
  3. Ivan vera loosuppayal.....Vilunthaalum meesayil man ottaatha katha...!!
    Ada podaa....Maithiri already devided the party....you never seen that..?

    ReplyDelete
  4. But You Did the SAME....

    ReplyDelete
  5. பட்டாலும் இன்னும் புத்தி வரவில்லையே பாலகுமாரா ! திருந்துங்கடா

    ReplyDelete
  6. உங்களுடைய ஆட்சியிலும் கஸ்ட்டப்படுத்தினீங்க

    இப்போ வந்திருக்கும் ஆட்சியிலும் இந்த மக்களை கஸ்ட்டப்படுத்தாமல் விடவே மாட்டோம் என்று அடம்பிடிக்கிறீங்களே.....!

    அப்பிடி நாங்கயெலாம் என்னடா செஞ்சம் உங்களுக்கு???

    ReplyDelete

Powered by Blogger.