Header Ads



எனது அரசியல் எதிர்காலம் குறித்து, விரைவில் அறிவிப்பேன் - பாயிஸ்

தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்,

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற தேர்தலில் நான் சுயேற்சையாக  (ஒட்டகம்) களம் இறங்கினேன். அத்தேர்தலில் 55 சதவீதம் தொடக்கம் 65 சதவீதமான வாக்குகள் புத்தளம் நகரத்திலிருந்து கிடைத்தது. புத்தளம் நகரத்திற்கு வெளியிலுமிருந்து வாக்குகள் கிடைத்திருக்குமாயின் புத்தளம் முஸ்லிம்கள் தமக்கென நிச்சயமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றிருப்பார்கள். எனினும் அது கைகூடவில்லை.

எமது சுயேற்சைக் குழுவுக்கு போதிய நேரம் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுக்கும் அளவுக்கு எம்மால் வாக்ககளை பெறமுடியவில்லை.

தேர்தலையடுத்து புத்தளம் நகரில் 3 முக்கிய கருத்துக்கள் என்னை நோக்கி முன்வைக்கப்படுகின்றன.

1, நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும்.
2, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான SLFP யில் இணையவேண்டும்.
3, UNP யில் சேரனும்

இந்த 3 விடயங்கள் குறித்தும் பரிசீலித்து வருகிறேன். எனினும் மிக அதிகமானவர்கள் நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதையே விரும்புகிறார்கள். புத்தளம் நகரில் றிசாத் பதியுதீனின் மேலாதிக்கம் அதிகமாகவுள்ளது. றிசாத் பதியுதீனின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அதனை செய்ய வேண்டுமெனவும் எனது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் மிகவிரைவில் இதுகுறித்து  கலந்தாலோசித்து எனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யவுள்ளதாகவும் இதன்போது பாயிஸ் மேலும் தெரிவித்தார்.

9 comments:

  1. முஸ்லிம் காங்கிரசின் மிகப் பெரும் ஆரம்பப் போராளி நீங்கள். சமூக உணர்வாளர். முஸ்லிம்களின் வெற்றி முஸ்லிம்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. மாறாக அது ஒரு தனி நபரின் கையில் தங்கி இல்லை. எனவே நிட்சயமாக நீங்கள் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து முஸ்லிம் மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேவையாற்றுவீர்கள் என நம்புகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் புத்தளத்தில் நிலவும் ஒரு வெற்றிடத்தை திரு. பாயிஸ் அவர்களை அரவணைப்பதன் மூலம் சிறப்பாக முஸ்லிம்களின் அரசியலை முன்னெடுத்து செல்லலாம் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete
  2. இவற்றை யாகும் செய்து முடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலே தான் நீங்கள் சேருவது மிக சிறந்தது.புத்தளம் தொகுதில முஸ்லிம் யாரும்.நாடாளுமட்ரத்திக்கு தெரிவாகவில்லை .இதன் காரணம் கூறி தேசிய பட்டியல் மூலம் நவவி அவர்களை ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸ் நியமித்தது.இதன் காரணம் இது வரை யாருக்கும் தெரியாது.எதிர்வரும் நவம்பரில் உள்ளூர் சபைக்கான தேர்தல் நடை பெற இருக்கின்றன.இத் தொகுதியை நனவி மூலமாக அனைத்து நகரசபை பிரதேசிய சபைகளை ஆக்கிரமிக்க திட்டம் வகுக்கப்பட்டு விட்டது.இதக்கு இத் தொகொகுதி மக்கள் நிச்சயம் உடன் பட
    மாட்டார்கள்.இது திட்டம்போடும் ஒரு சதி .இதனை நாம் அட்டும் அல்ல சகல மக்களுக்கும் புரிகிறமாதிரி விளங்கபடுத்தவேண்டும்.எமது தொகுதியை காப்பாற்ற சிறந்த அரசியல் வாதி நண்பர் பாயிஸ் மூலம் தான் நடக்கும்.ஈனவே புத்தளத்தை காப்பாற்ற நண்பர் பாயிஸ் நாம் அனைவரும் கைகொர்ப்போமாக.

    ReplyDelete
  3. you cant be a politocian anymore ,Rishad far better politician and proven to be a very powerful and a brave politician in Srilankan history,so its not wise enough to challenge to counter this man when he is on top

    ReplyDelete
  4. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தானே பாய்ந்து வெற்றிலைக்கு சென்றீர்கள் ஏனைய்யா தோற்றால்தானா உங்களுடைய மூளை வேலை செய்யுது ஐயோ பாவம்

    ReplyDelete
  5. பாரளமன்ரம் போவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பின்னர் அமைச்சி பதவி எடுப்பதற்கு இன்னும் ஒரு கட்சி என்ன போலப்புட இது இந்த பாரளமன்ர பதவி உங்களுக்கு சமுக சேவை செய்வதற்காஹ அல்ல உங்களுக்கு நீங்கல் சேவை செய்வதற்கு

    ReplyDelete
  6. If you want to join the SLMC better do it at the top without bothering about the puttalam SLMC,if not it is far better to remain in SLFP.Besides whoever wants to win the P/Urban Council will need your help defineitly.

    ReplyDelete
  7. We know you as SLMC man in the past so you can consider to join mother party. Do not allow oppurtunist rishard to invade in Puttalam.

    ReplyDelete
  8. at least you have understood the reality now....well...
    You did lot of wrong things in the past...by jumping with lot of parties....
    You must know that right or wrong....good or bad...win or fail...you must be in ONE & STRAIGHT PATH...dont change every minuts...

    ReplyDelete
  9. Politics is not a profession, there are many more well educated, social minded, leaders in Puttalam and surroundings..

    Please go through your past history you will understand...what you have done for just SEAT....so better take rest at home ....and leave the chance to growing young leaders to lead the society with knowledge and passion not by your Thuggish style.....

    ReplyDelete

Powered by Blogger.