Header Ads



அம்பாறை மாவட்டத்தில், மு.காவின் பொறுப்புகள் அதிகம்

-அபூ. மஹ்தியா-

2015 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் பொது தேர்தல் முடிவுகள் யாவும் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவு ஆசனங்களை வென்றுள்ள தனிப்பெரும் கட்சியாகத் திகழுகின்றது. தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் கூட ஆகக் கூடுதலான ஆசனங்களை வென்றுள்ள கட்சி என்ற வகையில் அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஆட்சி அமைக்க அழைக்கப்படலாம். இன்றோ அல்லது நாளையோ அவர் பிரதமராக மீண்டும் பதவி ஏற்கலாம்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணிகளில் சிறுபான்மை இன மக்களின் பூரண ஆதரவு முக்கிய இடம் பிடிக்கின்றது.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் சக்தியாக மீண்டும் தனது நிலையை தக்க வைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அதற்கு அடுத்த படியாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தேவையான  உறுப்பினர்களை வென்றெடுத்துள்ளது. வழமைபோல் இந்தத் தடவையும் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் தனது கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக அமைந்திருந்ததே தவிர முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகள் எதிர்ப்பார்ப்பது போல் சமூகம் சார்ந்த ஒரு வியூகமாக அது தென்படவில்லை. 

சில இடங்களில் ஒரு பெரிய கட்சியின் நிழலில் ஒதுங்கி போட்டியிடுவதும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவதை அந்தக் கட்சி வேண்டுமானால் அரசியல் வியூகம் என குறிப்பிடலாம். ஆனால் இது முழுக்க முழுக்க தனக்கென ஒரு தனிக் கொள்கையற்ற பச்சோந்தித் தனமாகும்.

இந்த நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டியுள்ளதாக கூறுவதை வடக்கில் தமழரசு கட்சி ஈட்டியுள்ள உண்மையான தெளிவான வெற்றியோடு ஒப்பிட முடியாது. வடக்கில் தமிழரசு கட்சி தனித்து நின்று தனது பலத்தை நிரூபித்துள்ளது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி அவ்வாறல்ல. அது ஒரு பெரிய கட்சி என்ற குதிரையின் முதுகில் ஏறி ஈட்டப்பட்ட வெற்றி. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி என இரு பிரிவினரையும் விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். இம்முறை கிடைத்துள்ள விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சில சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் பகுதிகளில் கிடைத்துள்ள கணிசமான விருப்பு வாக்குகளை நோக்குகின்ற போது இது மீண்டும் தெளிவாகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் சூட்சுமமாக அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேறு முஸ்லிம் வேட்பாளர்களையோ அல்லது தமிழ் வேட்பாளர்களையோ நிறுத்தக் கூடாது என்ற முன் நிபந்தனையின் அடிப்படையில் தான் போட்டியிடுகின்றது. இதனால் பாரம்பரியமாக இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சிக்கு வாக்களித்து விட்டு விருப்பு வாக்கை அளிக்க தமக்கு விருப்பமானவர்கள் எவரும் இல்லாத நிலையில் அதை வீணடிக்கக் கூடாதே என்ற காரணத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. இந்தத் தேர்தலிலும் அதுவே உண்மை நிலை. எனவே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று சொல்லலாமே தவிர இது அவர்களுக்கோ அல்லது அவர்களின் கட்சிக்கோ கிடைத்துள்ள அளப்பரிய வெற்றி எனக் கொண்டாட முடியாது.

ஆனால் எது எவ்வாறு இருந்த போதிலும் இந்தத் தெரிவுகள் மூலம் முஸ்லிம்காங்கிரஸின் பொறுப்பு இந்த மாவட்டத்தில் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாவட்டத்தில் எதிர்நோக்கிய மாபெரும் சவால். றிஷாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்து நின்று பொட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸுக்கு மாபெரும் சவாலாக அமைந்தது. தேர்தல் பிரசார காலத்தில் றிஷாட் அலை தீவிரமாக வீசியபோது முஸ்லிம் காங்கிரஸ் சற்று கலங்கிப் போனதை அதன் தலைமையின் தேர்தல் பிரசார கால நாகரிகமற்ற பேச்சுக்கள் தெளிவாக விளக்கி நின்றன. மக்கள் காங்கிரஸின் பிரதான வேட்பாளர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் இந்த 'றிஷாட் போபியா' (சுiளாயன Phழடியை) தான் காரணம் என்பதை அவர்கள் வேண்டுமானால் ஒரு கௌரவத்துக்காக மறுக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம்.

இங்கே றிஷாட் பற்றியும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அவரும் முஸ்லிம் காங்கிரஸோடு உள்ள தனிப்பட்ட பிரச்சினை, ரவூப் ஹக்கீமுடன் உள்ள தலைமைத்துவ ஈகோ என்பனவற்றின் காரணமாக ஒரு முரண்பாட்டு அரசியல் போக்கை கடைப்பிடிக்கின்றாறே தவிர அவருடைய அரசியல் வியூகமும் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பச்சோந்தி நிலையாகத் தான் உள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டார்களே தவிர ஆசனங்களை வெல்ல முடியுமா? வெல்லுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான விட்டுக் கொடுப்புக்கள் என்ன? என்பன போன்ற விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்கில் காலூன்ற நினைக்கும் றிஷாட் முதலில் இந்த மாவட்டத்தின் அரசியல் நிலை பற்றியும், இந்த மாவட்ட மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மனோநிலை மற்றும் இயல்புகள் பண்புகள் பற்றியும் தேவையான அரசியல் டியூஷன் எடுப்பது சாலச்சிறந்தது. வட மாகாணத்தில் பேசும் அகதிகளின் அவலக் கதைகளை கிழக்கில் தொடர்ந்து பேசுவதால் அந்த மக்களின் மனங்களை வெல்ல முடியாது. ஒரு கட்டத்துக்கு அப்பால் அது அவர்களுக்கு தேவையற்ற விடயமாக சலித்துப் போய்விடும்.

ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளார். ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும் கிடைக்கவுள்ளது. றிஷாட் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நான்கு ஆசனங்களை பெற்றுள்ளார். ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைக்கவுள்ளது. கிட்டத்தட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளில் கணிசமானவற்றை இருவரும் சூறையாடிவிட்டனர்.

இனி அடுத்த கேள்வி இன்னும் எத்தனை காலத்துக்கு அவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருப்பர். இந்தப் பாராளுமன்றம் ரணிலுக்கு நெருக்கடி மிக்க ஒரு பாராளுமன்றமாகவே இருக்கும். தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு எந்த நெருக்கடியும் இன்றி ஆட்சி சுமுகமாக நீடிக்கும் என்ற உத்தரவாதத்தை எவரும் வழங்க முடியாது. முஸ்லிம் தலைமைகள் பல்டி அடிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களும் அல்லர் .கடைசியாக ஒரு விடயத்தை மட்டும் கூறி முடிக்கலாம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி றொனால்ட் றேகன் ஒரு இடத்தில் அரசியல் பற்றி தனது அனுபவத்தை இப்படிக் குறிப்பிடுகின்றார். 'உலகில் மிகவும் பழமையான தொழில் விபசாரம். இரண்டாவது பழமையான தொழில் அரசியல். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நான் இவ்விரண்டுக்கும் இடையில் அதிக ஒற்றுமைகளையே காணுகின்றேன். வேற்றுமைகளை அவதானிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த தொப்பி அளவாக இருந்தால் யார் வேண்டுமானாலும் போடலாம். 

6 comments:

  1. In Wanni and Trinco, 2 Muslims in each district have been elected. None of them are from SLMC. It shows SLMC is not moving in a right direction.

    ReplyDelete
  2. Boolshit article and comments....is this from Rishad gang..?

    ReplyDelete
  3. அபூ மஹ்தியா, நீங்கள் இன்னும் யதார்த்தமான அரசியலை தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்த பதிவு காட்டி நிற்கிறது.

    உதாரணமாக:
    1. கட்சியின் நலன் சமூகம் சார்ந்த வியூகம் என எதை குறிப்பிடுகிறீர்கள்.

    2. தனித்துக் கேட்பதும், கூட்டாக கேட்பதும் தனிக் கொள்கை அற்ற தளம் என்று எப்படி கூருகிரீர்கல். நீங்கள் குறிப்பிடும் தனிக் கொள்கை தான் என்ன? முதலில் நீங்கள் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பயணம் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    3. தமிழரசி கட்சியையும் முஸ்லிம் காங்கிரசையும் யார் ஒப்பிட்டது? இருகட்சிகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலும், பயணமும் முற்று முழுதாகவே வேறு பட்டது.

    4. அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த வெற்றி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி எனக் கூற முடியாது எனக் கூறுவது, சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.

    5. தனக்கு எதிராக போட்டியிடுபவருக்கு சட்டரீதியான சவாலை விடுவது எப்படி ரிசாத் போபிவியா வாக குறிப்பிடுவீர்கள்?

    Ilma Gaffoor, You are right.

    ReplyDelete
  4. Slmc ya kotram kora yarukum vettkam illaya pirintha madgalai. Patrick orvoan koda karthu solla maatan signal katciya irntha 10 adikama vella mudium munfikkugal allah vidam Basil sollatum nalla joli pannitu ponga thindatha kakka varum Narva adi pahudi anjoy

    ReplyDelete
  5. Munafikugaluku vote potavargalukum irkku aapu. Allah judgment strong

    ReplyDelete
  6. ithil etkaththkka sila karuththukkal ullana.

    ReplyDelete

Powered by Blogger.