பௌத்த பிக்குகள் அரசியலில், பங்கேற்பதை விரும்பாத சிங்களவர்கள்
கெளதம புத்தபிரான் இந்த உலகில் அனைத்துப் பற்றுதல்களையும் துறந்தவர். கெளதம புத்தபிரானின் போதனையை, அவரின் வாழ்வியலை அறிந்தால் புத்தபிரானின் தெய்வீகம் உணரப்படும்.
புத்தபிரானின் போதனைகளைப் பரப்பி அதன் ஊடாக, உலக மக்களின் வாழ்வியலை தர்ம வாழ்வாக்கும் பணியில் ஈடுபடுவதற்காக புத்த பிக்குகள் தாமும் துறவை மேற்கொண்டு மக்கள் கொடுப்பதை உண்டு பணி செய்தல் என்ற மிகப்பெரும் தவவாழ்வை மேற்கொள்ள வழி செய்யப்பட்டது.
புத்தபிரான் எங்ஙனம் துறவை மேற்கொண்டாரோ அதற்கு ஈடாக புத்த பிக்குகளும் துறவை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே புத்த பிக்குகள் அணிகின்ற காவியும் அமைந்தது.
பெளத்த சிங்களவர்கள் யாராவது இறந்து விட்டால், அவரின் வீட்டுக்குச் செல்பவர்கள் ஒரு முழம் நீளமான காவித் துண்டை எடுத்துச் சென்று இறந்தவரின் உடல் மேல் சாத்துவர். மரணச் சடங்கிற்குச் செல்கின்ற அனைவரும் இவ்வாறு செய்வர்.
இறந்தவரின் உடலை மயானத்தில் தகனம் செய்யும் முன் இறந்தவரின் உடல் மேல் போடப்பட்ட ஒரு முழத்திலான காவித்துண்டுகளை புத்தபிக்கு ஒருவர் எடுத்துச் சென்று அந்த முழத் துண்டுகளைப் பொருத்தி ஆடையாக அணிவார்.
இறந்த உடலின் மேல் போடப்பட்ட காவித் துணியை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே எவராலும் விரும்பப்படாத ஆடையை அணிவதே தூய துறவுக்கு உகந்தது என்ற அடிப்படையில் இறந்தவர்களின் உடல்மேல் அணியப்படும் காவி முழத்துண்டை பொருத்தி பெளத்த பிக்குகள் அணிகின்ற மரபு நடைமுறையில் இருந்தது.
அந்த நடைமுறை இன்று மலையேறிப் போயிற்று. இதுதவிர; பெளத்த பிக்குகள் யாசித்து, கிடைக்கின்ற உணவை உண்ண வேண்டும் என்பதே நியதி. யாசிப்பின் போது உணவு கிடைக்கவில்லையாயின், பசியை தவமாக்க வேண்டும்.
ஆனால் இன்று என்னென்ன உணவுகள் தேவை என்று பட்டியலிட்டு மக்களிடம் கொடுத்து அதை வாங்கி உண்ணுகின்ற துறவு நடைமுறையே உண்டு.
இதற்கு அப்பால், இனவாதம் பேசுவது; அரசியலில் ஈடுபடுவது; ஆட்சி அதிகாரங்களைப் பெளத்த பீடங்களுக்குள் வைத்திருப்பது என ஏகப்பட்டவை நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்ட 150 பெளத்த பிக்குகளை உங்கள் வேலைகளைப் பாருங்கள் என்று சிங்கள மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டியதைப் பார்த்த போது சிங்கள மக்கள் விழிப்படைந்து விட்டனர் என்று அறுதியிட்டுக் கூறமுடிகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வில் மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக இருந்த பெளத்த பிக்குகளை அரசியலில் இருந்து ஓடத் துரத்திய சிங்கள மக்களின் மனநிலை இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.
தேசியப் பட்டியலில் பெளத்த பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகலாம். ஆனால் பெளத்த சிங்கள மக்கள் பெளத்த பிக்குகளுக்கு மிகத் தெளிவாகப் போதனை ஒன்றை செய்துள்ளனர்.
அது அரசியல் பக்கம் வந்தால் உங்களுக்கு இதுதான் நடக்கும் என்பதாகும்.

அதிகமான சிங்கள மக்கள் நல்லவர்கள்தான் மறுப்பதற்கு இல்லை ஆனால் இவ்வாறான புழக்க வலி இல்லாத வாக்கவர்கல்தான் இனத்துவேசத்தை உண்டுபண்ணுவது.அதிலும் நாம் ஒரு விடயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.நாம் உண்மையிலே ஐம்பது வீதமாவது இஸ்லாமிய கொள்கையில் இருக்கிறோமா?இந்த இனத்துவேசம் எங்கிருந்து எப்படி எந்த வகையில் ஆரம்பிக்கிறது என்பதையும் நாம் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும்.1 .பணம் படைத்தவர்கள் என்ற பெயரில் நம் பெற்றோர்கள் தன பிள்ளைகளை பெரும்பான்மை இனத்தவர்களின் பாடசாலைகளில் சேர்ப்பது,தப்பு என்று நான் சொல்ல வில்லை.அந்த பாடசாலைகளில்.இவர்களுக்குரிய இஸ்லாமிய பாடம் நடக்கிறதா என்றால் அது குதிரைக்கொம்புதான்.அந்த அந்நிய மத சூழலில் கல்வி கற்று வரும் நம் மாணவர்கள் சக மாணவிகளை காதலிப்பது அதில் ஏற்ப்படக்கூடிய சில பின் விளைவுகளால் மாணவியின் பெற்றோரால் சகோதரர்களால் இம்மாணவன் தாக்கப்படும்போது அங்கேயும் ஒரு இன வெறுப்பு ஏற்ப்படுவதொடு இனத்துவேசம் பிடித்தவர்களுக்கு பால்பானையில் பணியாரம் விலுந்தாப்போல் கொண்டாட்டம்.சிங்கள மாணவியை முஸ்லிம் மாணவன் (தம்பியா,மறக்கலையா)கடத்தியதாக வதந்திகளை கிளப்பி எதோ ஒரு பத்தினிப்பெண்ணை கடத்தியதுபோல் இனத்துவேசம் வளர்க்கப்படுகிறது.மற்றயது கொடுக்கல் வாங்கல்கள்.உண்மையிலே மோசமான நிலை,குறிப்பட்ட காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவது.இவ்வாறாக இஸ்லாத்துக்கு சம்மந்தமில்லாத வேலைகளை செய்து சகோதர மதத்தவர்களின் வெறுப்பை சம்பாரிப்பது.இது எந்த வகையில் நியாயம்.ஒரு முஸ்லிமுடைய பெரும் பங்கு கொடுக்கல் வாங்கல்தான் எவன் ஒருவன் கொடுக்கல் வாங்கலில் வாக்குரிதியில் சரியாக செய்யவில்லையோ அவன் உண்மையான முஸ்லிம் இல்லை.விளையாட்டு வீரை தாஜுதீன் கொலை கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று.அந்த கொலை நடக்க அன்ன காரணம் நம் எல்லோருக்கும் தெரியும்.ஒரு காதல் விவகாரம்.(அதாவது விபச்சாரம் சம்மந்தமான )பிரச்சினை.இவர் கல்யாணம் கட்டி இரண்டு பிள்ளைகளின் தந்தை இரண்டாவது இவரின் காதலி ஒரு முஸ்லிம் இல்லாத பெண்.இந்த இடத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது சூரா நூறை ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் விளங்கும்.இஸ்லாம் சம்மந்தமான விடயம் ஒரு பக்கமாக இருக்கட்டும்.(நாட்டில் உள்ள அமைச்சர்களே நேருக்கு நேர் நின்று பேச முடியாத அளவுக்கு கொடூரமான ஒரு அரசாங்கத்தை மேற்கொண்டு வந்த மஹிந்த.அவர் குடும்பம் செய்யும் குற்றங்களை சரி என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் அவருடைய மகன் காதநிக்கும் ஒரு பெண்ணை தான்போய் காதலித்து அவனிடம் வாக்குவாதம் பண்ணினால் என்ன நடக்கும் என்று கொண்ச்சமாவது யோசிக்க வேண்டும்.இதன் பின் விளைவு தன்னை மட்டுமல்லாது சமுதாயத்தையும் பாதிக்கும் என்று நன்கு தெரியும்.சிறுபான்மை என்ற ஒரு உணர்வு நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும் ஏற்ற காரணத்துக்காகத்தான் இவ்வாறு எழுதுகிறேனே தவிர மகிந்தவின் கொலைகளை ஆதரித்தோ தாஜுதீனுக்கு நியாயம் கிடக்க கூடாது என்பதற்கோ அல்ல.குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மாற்றுக்கருத்து இல்லை குற்றம் ஆரம்பிக்கும் அத்திவாரத்தை நாம் இடக்கூடாது என்பதே என் கருத்து
ReplyDeleteஉங்களுடைய கருத்தை 0 ஆல் பெருக்கவேண்டும்.
ReplyDeleteநீங்கள் ஒரு கிணற்றுத்தவழை, வசீம் திருமணம் முடிக்கவும் இல்லை, 2 பிள்ளைகளுக்கு தந்தையும் இல்லை, அது அவருடைய சகோதரியின் பிள்ளைகள், படம் பார்த்து கருத்துச்சொல்லி புத்திசாலியாக காட்டிக்கொள்ள வேண்டாம். அலசி ஆராய்ந்துவிட்டு சமூகத்திற்கு புத்திசொல்லவும். அது யோஷிதவின் காதலி என்பதையும் மறக்க வேண்டாம்.
Ella matha ( religion ) Saarfaana katchihalum same. Including Muslim congress. They formed the party to benefit themselves not the people and by forming such party the racism increased
ReplyDelete