Header Ads



"அதிர்ச்சித் தகவல்" முஸ்லிம் மாணவர்களின், இஸ்லாம் பாடநூலை நெறிப்படுத்திய ஞானசாரர்

-நஜீப் பின் கபூர்-

தற்போது முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளில் பாவிக்கின்ற இஸ்லாம் பாடத்துக்கான கைநூல் பொதுபல சேன அமைப்பினரின் நெறிப்படுத்தலின் கீழ் தயாரிக்கப்பட்டது என்பதனை இந்தக் குறிப்பை  jaffna muslim இணையம் மூலம் பொறுப்புடன் அறியத் தருகின்றறேன்.

நேற்று 24.08.205 இரவு  (ஹிரு) தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கலந்துறையாடலொன்றில் கலந்து கொண்ட போது பொதுபல சேன அமைப்பின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

அவர் கருத்துப்படி,

 இலங்கையில் அரசாங்கத்தால் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்ககுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடத்துக்கான கைநூலில் நிறைத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.  அவற்றை நீக்கிக் கொள்ளுமாறு பல வருடங்களாக முயற்ச்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் அது கைகூட வில்லை.

கடந்த வருடம் நாம் மேற் கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் அந்தத் தவறுகள் நீக்கப்பட்டு இந்த வருடம் தவறு சரி செய்யப்பட்டு, புதிய இஸ்லாம் பாட நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது எமக்குக் கிடைத்து பெரு வெற்றி என்று அந்தப் பாடநூலை தொலைக் காட்சியில் தூக்கிப் பிடித்துக் காட்டினார் ஞானசாரத்தேரர்.

அப்படியானல் நாங்கள் எழுப்புகின்ற கேள்வி இஸ்லாம் பாடநூலைத் தயாரிக்கின்ற அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி இருந்தார்களா? அப்படியானால் அது ஏன்? அவை எவை?

அல்லது உண்மையான தகவல்களை ஞானசாரரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து முஸ்லிம் அதிகாரிகள் நீக்கிக் கொண்டார்களா?

தாங்களுக்கு இது விடயத்தில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ஏன் இதனை முஸ்லிம் அதிகாரிகள் சமூகத்திற்கு முன் அறிவிக்காமல் மௌனம் காத்தார்கள்?

ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற அரசியல் தலைமைகள் இது பற்றி அறிந்திருந்தார்களா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் உரிமை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் சமூகத்தை உடனடியாகத் தெளிவு படுத்த வேண்டும்...!

28 comments:

  1. இதற்கும்கூட ஜம்மியதுல் உலமாவும் அறிஞர்களும் தானா? எனக்கும் உங்களுக்கும் கடமை இல்லையா?
    எடுத்த தற்கெல்லாம் பிறர் மீது பழி சொல்லி தமது பொறுப்பையும் கடமையையும் தட்டிக்கழிக்கும் சமூகமாக இன்னும் எத்தனை காலத்தை வீணடிக்கப்போகிறோம்

    ReplyDelete
  2. Yes.what kind of chenged in islam book made from bbs? Why they r involve ? Why not the goverment ministry of education conselting with muslim culture ministry n jus and muslim mps.? So what going on in srilanka ? Bbs doing indirec goverment in srilanka?? So many question ?? There chould want to know to public????

    ReplyDelete
  3. Yes we all shoud protest against this, our teacher,s, principaples, students, and pearents have ti boycote this booj, if this book is against islam, or misleading teaching of islam

    ReplyDelete
  4. முதலில் இந்த ஞான சாரர் கூறிய விடயம் உன்மைதான என்பதை உறுதிப் படுத்தப்பட வேண்டும். அப்படி உண்மையானால் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிட்சயமாக முஸ்லிம் சமூகத்துக்கும் இஸ்லாத்துக்கும் மாபெரும் துரோகம் செய்துள்ளார்கள். நமது சமூகத்தில் சிலர் உள்ளார்கள் "வக்களில் படுத்த நாய் மாதிரி" அவர்களுக்கு பட்டம் பதவிகள் வேண்டும் அதே நேரம் சமூகம் சார்ந்தவிடயங்களில் பயந்த நிலையில், சமூகத்துக்கு தெரிய வேண்டிய விடயங்களை மூடி மறைத்து விடுவார்கள் அல்லது அவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள், அது தான் சமூகத்துக்கு நல்லது என்ற நினைப்புடன் சமூகத்துக்கு, சமூகத்தின் புதிஜிவிகளுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்த மாட்டார்கள். முதலில் இவர்களை போன்றவர்கள் இனம்காணப்பட்டு அவர்களின் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். நஜீப் பின் கபூர் அவர்களுக்கு எமது நன்றிகள்.

    ReplyDelete
  5. First we have to know who is talking truth...

    ReplyDelete
  6. Dear Brothers We Muslims should not get excited for an article this quickly. If remember a hadees saying... "If one brings to you a message, you should clarify before acting on it".

    So let the people in authority and community leaders look into this matter and act on it wisely. further muslim community should be made clear of what happened is true or not and if true what action should be taken next.

    I feel sorry for the comment by "pina chena", If Mr Najib bin Gafoor is correct and asking responsible bodies like Jammiyathul Ulema, Ministers and leaders to look into this matter... I do not find anything wrong. if they are representing Muslims in this country and can go up to UN to support our passed president for his crimes, why not they ..?

    ReplyDelete
  7. This pikku has nothing to do. Inshallah he will be purnished very soon.

    ReplyDelete
  8. I too watch this program he saw Grade 11 Islam book in Sinhalese language the subject he change History of Srilankan Muslim...

    ReplyDelete
  9. இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அதற்கு முழுதாக பொருப்பு கூறவேண்டியவர்கள் பாட்னூலை தயாரித்த முஸ்லிம்களே... மாற்று மதத்தவ்ர்கள் சுட்டிக்காட்டக்கூடிய அளவு தவறு இருந்ததன்றால்.. இந்த பாடனூலை ஆக்கியவர்களின் இஸ்லாமிய அறிவை என்ன சொல்வது.... எனவே இப்படிப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பதையும் அது சார்ந்த பாடனூல் மற்றும் கல்விப்பொருப்பாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும் ..ஏன் மாற்றப்பட்டது எதற்கு அடிபனிந்தார்கள் என்பதையும் சொல்லிக்காட்டியாக வேண்டும் ... இந்த செய்தியை வெளியிட்ட தளமே இதை தெளிவு படுத்த அது சார்ந்தவர்களை அணுகி விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும் .. எதிர்பார்க்கிறொம்

    ReplyDelete
  10. is it possible to post the video link as well as name the TV channel.

    ReplyDelete
  11. முதலில் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும் பின்னர் உண்மை என நிரூமான ஆனால் இதக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  12. The Gnanasara & co still a threat to the peace and harmony of our country. The 'Yahapalanya' should take necessary measures to put an end!

    ReplyDelete
  13. கடந்த காலப்பாடப்புத்தகங்களையும் இப்போது இவன் சொல்லும் பாடப்புத்தகத்தையும் வைத்து சரி பார்க்க வேண்டும் அப்போது எது நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத்தெரியும்.என்ன நடக்குது இந்த நாட்டில்.இனிமேல் முஸ்லிம்கள் சம்மந்தமான எந்த முடியு எடுப்பதாக இருந்தாலும்உலமாசபையோ,சூரா சபையோ,யாராக இருந்தாலும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் அப்போது உங்களுக்கு எதித்து பேச முடியாவிட்டால் ஜனநாயக நாடு என்ற வகையில் ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் நாங்களும் மிந்த நாட்டு பிரஜைதான் என்ற அடிப்படையில் நாங்கள்.ரோட்டில் இறங்கி போராட்டம் சைய்வோம்.PINA CHENA அவர்களே.நீங்கள் சொல்வது போன்று நாம் பொது மக்கள் எல்லா விடயத்திலும் தலைப்போட முடியாது சமூகத்தின் தலைவர்கள் என்று இவர்களை நாம் வைத்திரிப்பது எதற்கு.நடக்க வேண்டியதல்லாம் நடந்து முடிந்தவுடன் அறிக்கை விடவா?பொறுப்பு வாய்ந்த உலமா சபை 24 மணி நேரமும் ஒரு உலவுத்துரைபோன்று கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.சுட்டிகாட்டிய நஜீப் அவர்களுக்கு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  14. 11ஆம் ஆண்டு இஸ்லாம் பாட புத்தகத்தில் விலியம் ஹைட் எனும் சரித்திர ஆசிரியரது நூலை ஆதாரம் காட்டி அராபியர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை க்கு வந்தார்கள் என குறிப்பிடப் பட்டிருந்ததாவும் தான் கல்வி அமைச்சுக்கு அது பிழையான தகவலென சுட்டிக்காட்டி அதனை நீக்கிவிடுமாறு கோரியதனால் 2013ல் அது நீக்கப்பட்டதாகவும ஞானசார கூறுகிறார்.
    வேடிக்கை என்னவென்றால் இவளவு துள்ளிக்குதிக்கும் நம்யாருக்கும் அவராகவே வெளிப்படுத்தும்வரை இது பற்றி தெரிந்திருக்கவில்லை.
    too late to regret

    ReplyDelete
  15. எது எப்படியாயினும், பொது பல சேனாவின் வருகையின் பின்னர் இஸ்லாமியச் சோனகர்கள் முஸ்லிம்களாக பரிணமிக்கச் செய்யப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாகும்!

    ReplyDelete
  16. it might be latest trick to approach

    ReplyDelete
  17. Ulama sabaki therinthalum alati kolla maatargal BBS oru payanthu pesa maatargal quraan visaythil sltj thavira ellorum poti pambu pora paakathan ulama sabaya

    ReplyDelete
  18. Salams.. Abdulwahi, Imthiyaz Imthi
    If u have peoTv then u can re-watch full program, BBS is not only talking about the history issue of the book, there are several problem. If we go to an open debate, then we might have to answer those(BBS's) all the questions... So it is better to being silent...

    ReplyDelete
  19. First of all, some educated scholars should analise our Holy religious books provided free to poor students and compare with what this person says. after that only we should come to a decision about the employed by the MoE for the said task.

    ReplyDelete
  20. Suitable people are not suitable everything's in money talks. Therefore we can criticize , in the end yaa Allah what is going to be victimize? Poor people and our noble religion ? Or our history of Muslims in Sri Lanka. Anyhow who and which religion came to sri Sri Lanka first? It is trillion worth of question. Theory of geography says what ? Gnana has to study a bit.

    ReplyDelete
  21. here is the link for the program check 1:35:50 on you tube time

    https://www.youtube.com/watch?v=EOMgtmPdeWk

    ReplyDelete
  22. Guys, First we should make sure the authentication of the information that he did it. Second we have to see the new one to find out whether the new one is correct or not (if it is correct no then issues. if not we should take action). 3. to find out changes done if so we have to compare new and the previous one and we can make sure whether actually the old one had issues or not? 4. If the new one has errors and misleading info than we should bring law suite against those who did and responsible for. 5. we should form(combine existing) a common body to deal with such issues

    ReplyDelete
  23. கல்வி அமைச்சினால் 2008ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ள 11ஆம் தரத்திற்கான இஸ்லாம் பாடநூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும் என்ற ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் வரலாறு திரிபுபடுத்தப்பட்டதற்கான பதிவுகள் இருந்தன. இதனை கடந்த ஆண்டு நாம் திருத்தினோம். அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்களில் அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய தேரர் ஒருவர் தெரிவித்த கருத்தை மையப்படுத்தி எமது ஊடகங்கள் பல்வேறு வழிமுறைகளில் எழுதியும் பகிர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

    இது இஸ்லாம் பாடநூல் தொடர்பான நம்பகத் தன்மையில் மாணவ, ஆசிரிய சமூகங்கள் மத்தியிலும் பொதுவாக முஸ்லிம் பொதுமக்களிடையேயும் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைகின்றது.

    செய்திகளை உறுதிப்படுத்தாமல் அதன் நம்பகத் தன்மையை ஆய்ந்து அறியாமலும் பொறுப்பற்ற முறையில் முஸ்லிம் ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி வருவது ஊடக தர்மங்களுக்கு முற்றிலும் முரணானதாக அமைகிறது.

    கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வருடாந்தம் ஒவ்வொரு பாடநூல் பற்றியும் மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை அச்சிடுவது வழமையான ஒரு நடைமுறையாகும்.

    இதனடிப்படையில் ஏனைய பாட நூல்களைப் போன்று இஸ்லாம் பாடநூலும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த மீளாய்வில் “இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும்” என்ற தலைப்பிலான பாடத்தின் உள்ளடக்கம் கொண்டுள்ள தகவல்கள் கவனத்திற் கொள்ளப்பட்டது.

    கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உரிய அதிகாரிகளுக்கு குறித்த மீளாய்வு தொடர்பான விபரங்களையும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனையையும் வழிகாட்டலையும் பெற்றுக் கொள்வதற்காக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜ்சோம தேவ தலைமையிலான குழுவினரை நியமித்தது.

    கல்வி வெளியீட்டுத் திணைக்கள மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் இக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றை தற்போது பாடநூலில் எழுதப்பட்டுள்ளதை விட மிகவும் வலிமையான ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் எழுதுவது என தீர்மானிக்கப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு அமைய புதிய ஆதாரங்கள், தரவுகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் சேகரிக்கப்பட்டு போராசிரியர் ராஜசோம தேவ தலைமையிலான குழுவினருடன் அவை கலந்துரையாடப்பட்டு இலங்கை “முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும்” என்ற தலைப்பின் கீழ் உள்ள முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு என்ற உப தலைப்பு எழுதப்பட்டது.

    -அபூ அயானி

    ReplyDelete
  24. மீளமைக்கப்பட்ட பாட உள்ளடக்கத்துடன் திருத்திய பதிப்பு 2014-2015 ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டன. திருத்திய பதிப்பு பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

    01. கி.மு 27 இல் ஆட்சிக்கு வந்த ரோம பேரரசர் ஒகஸ்தஸின் காலத்தோடு அரபு வணிகர்களின் இலங்கையுடனான தொடர்பு விபரிக்கப்பட்டுள்ளது.

    02. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த அரேபியர் ஜஸீரதுல் யாகூத் (சிவப்பு மாணிக்கத் தீவு) என்று இலங்கையை அழைத்தனர் என்பதன் ஊடாக அரபு வியாபாரிகளிடையே இலங்கையில் மாணிக்கக் கற்களுக்கு சிறந்த செல்வாக்கு காணப்பட்டது என விபரிக்கப்படுகிறது.

    03. கி.பி 300 ஆம் ஆண்டளவில் இறக்குமதி செய்யப்பட்ட பார்த்தே- காசேனீயன் நீல, பச்சை நிற முலாமிடப்பட்ட மற்பாண்டங்களின் சிதைவுகள் அநுராதபுர சேதவனாராம விகாரையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்டமையை முன்னிறுத்தி அறபு வணிகர்களின் இலங்கையுடனான தொடர்பு விளக்கப்பட்டுள்ளது.

    04. கி.பி. 700களில் அரபு முஸ்லிம் வணிகர்கள் இலங்கையில் குடியேற்றங்களை அமைத்தனர் என்பதன் ஊடாக இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்புக்கள் உறுதிப்படுத்தப்படுகின்றது.

    05. அரபு முஸ்லிம்களின் திறமைகள், அவர்களின் பண்பாடுகளின் மூலம் சுதேசிகளினுடனான உறவு பலமடைந்து முஸ்லிம் குடியேற்றங்கள் பெருகியமை பற்றியும் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றியும் விரிவாக விளக்கப்படுகின்றது.

    06. முஸ்லிம்களின் பண்பாடுகளின் ஊடாக மன்னர்களின் நெருக்கத்தைப் பெற்று கௌரவிக்கப்பட்டு சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரி போன்ற உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டனர் என்று சிங்கள மன்னர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

    புதிய பதிப்பில் பல்வேறு வலிமையான, கனதியான வரலாற்று ஆதாரங்களுடனும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட பொருத்தமான தகவல்களுடனும் விளக்கமாக இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு எழுதப்பட்டுள்ளது.

    மீள் பதிப்பில் ஆரோக்கியமான, வலிமையான வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் பாடம் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது முஸ்லிம் என்ற வகையில் நாம் பெருமைப்படக் கூடிய ஓர் அம்சமாகும். அவ்வாறே எதிர்கால சந்ததியினர்களுக்கு மிகச் சரியானதும் சிங்கள வரலாற்றாசிரியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான வரலாற்றுச் சான்றாதாரங்களை முன்வைப்பதற்கும் வழிகோலியுள்ளது.

    இது இவ்வாறிருக்க, சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு தேரரின் கூற்றை வைத்துக் கொண்டு எமது சமூகத்தின் அங்கத்தவர்கள், ஊடகங்கள் இஸ்லாம் பாடநூலின் மீதும் அதற்குப் பங்களிப்புச் செய்த அதிகாரிகள் மீதும் கணைகளை எறிவது எந்த வகையில் நியாயம் எனப் புரியவில்லை.

    குறித்த தேரர் இஸ்லாம் பாட நூலின் ஒரு பாடம் தொடர்பாகவே கருத்துத் தெரிவித்திருக்க, முழு பாடப் புத்தகமும் தேரரின் நெறிப்படுத்தலைக்கமைய திருத்தியமைக்கப்பட்டது போன்று ஊடகங்கள் செய்தி அறிக்கையிடுவதன் மர்மம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

    இஸ்லாம் பாடநூல் தொடர்பாக தேசிய சிங்களப் பத்திரிகைகளில் (2013.02.27) தலைப்புச் செய்திகளாகவும் விமர்சனங்களாகவும் உண்மைக்குப் புறம்பான தரவுகளை உள்ளடக்கி கட்டுரைகள் வெளிவந்தபோது எமது ஊடகங்கள் அவற்றை ஏன் கண்டுகொள்ளவில்லை என்றும் ஊகிக்க முடியவில்லை. அவ்வாறே உண்மையை அறிய முற்படாமல் குறித்த தேரரின் புரளியை இவ்வளவு முக்கியத்துவம் மிக்க பேசுபொருளாக ஏன் மாற்றியுள்ளனர் என்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    -அபூ அயானி

    ReplyDelete

Powered by Blogger.