Header Ads



வசீம் தாஜுடீன் வாகனம், விபத்துக்குள்ளான இடத்தில் பரிசோதனை

றகர் வீரர் வசீம் தாஜுடீன் வாகனம் விபத்துக்குள்ளான நாரஹென்பிட்டிய, ஷாலிகா மைதானத்திற்கு அருகில் இரகசிய பொலிஸார் உட்பட சட்ட வைத்திய வல்லுநர்கள் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

2012 ம் ஆண்டு மே மாதம் அவ்விடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வசீம் தாஜுடீனின் உயிரிழந்ததாக பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அவர் விபத்தில் உயிரிழக்கவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம், முதல் வாரம் தாஜுடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட வைத்திய விசாரணைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


No comments

Powered by Blogger.