Header Ads



நவவியின் நியமனத்திற்கு, ஹமீட் எதிர்ப்பு

இலங்கை நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய பட்டியல்க்கு முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைவருக்கு எதிராக செயலாளர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கட்சியின் கூட்டுப் பொறுப்புகளிலிருந்து விலகி தன்னிச்சையாக இந்த நியமனத்தில் முடிவு எடுத்துள்ளதாக பொதுச் செயலாளரான வை. எல். எஸ். ஹமீட் குற்றம் சாட்டுகின்றார்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐதே முன்னணியில் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேர்தலுக்கு முன்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக கட்சியின் செயலாளரான வை. எல். எஸ் ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்திருந்தது.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் ஐதே முன்னணியின் தேசியப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அ.இ.ம. காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட எம். நவவியின் பெயரை முன் மொழிந்துள்ளது.

இது தொடர்பாக அ.இ.ம. காங்கிரஸ் தலைவர் மீது சீற்றமடைந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளரான வை. எல். எஸ் ஹமீட் தனக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை சதி செய்து தலைவர் பறித்து விட்டதாக குற்றம் சாடடியுள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விளக்கம் நாளை சனிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

4 comments:

  1. ஹமீது காக்கா, சும்மா அறிக்கைகளை விட்டுக்கொண்டு சிக்கலுக்க மாட்டாமல் ஆப்பு மன்னர் ரிசாத் அவர்கள் தருவதை எடுத்துக் கொண்டு நடக்கிற காரியத்தை பாருங்கள். சலுகைகளை நம்பி அரசியல் நடத்தும் கூட்டம் ஆச்சே..!!!

    ஆனால் ஜமீல் அவர்கள் அறிக்கை விட மாட்டார் என்றே நம்புகிறோம். ஏனெனிளில் இன்னும் ஈரம் காயவில்லை. ஆனால் சிராஜும், இஸ்மாயிலும் ஏதாவது சொல்வார்கள் என்று நம்புகிறோம்.

    ஆனால் ரிசாத் அவர்கள், புத்தளம் மக்கள் அரசியல் அனாதையாவதையாகி விடுவார்கள் என்ற ஒரு நியாத்துடன் அறிக்கை விடுவார் என நபுகிறோம்.

    ReplyDelete
  2. இப்போது புரிகிறதா? றிசாத் யாரென்பது?
    ஆனாலும் இது அப்பட்டமான சுயலமில்லையா?
    எமது சமூகம் இந்த சுயநல அரசியல் வாதிளை எப்போது புரிந்து கொள்ளும்?

    ReplyDelete
  3. அமீரின் முடிவுக்கு கட்டுப்படுவது உன்மை முஸ்லீமின் கடமை.தலை இருக்க வால் ஆடக்கூடாது.விணை விதைத்தால் விணைதான் அருக்க வேண்டும்.இவர் எம்.பியாகி கிழிக்க ஒன்றுமில்லை.தலைவரின் முடிவு மிகச் சரியானதே

    ReplyDelete
  4. கடந்த பத்து வருடங்களாக கட்சியின் செயலாளராகவும், சில பொறுப்புக்களிலும் இருந்த நீங்கள் அம்பாறையில் செய்த நல்ல நடவடிக்கைகள்தான் என்ன / உங்களால் எத்தனை வாக்குகளைப் பெற முடியும் , என்பதெல்லாம் சிந்தித்து ஒழுங்காக தருவதை எடுத்துக் கொண்டு இருங்கள் அல்லது வழிவிட்டுச் செல்லுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.