Header Ads



'ரணில் பிரதமரானால்..' இலங்கை முஸ்லிம்கள் மீது, அமெரிக்கா செல்வாக்கு செலுத்துமா..?

-சட்டத்தரணி பஸ்லின்  வாஹிட் -

எல்லோரும் எதிர்பார்த்தது போல் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டது .ஒரு அருதிப்பெரும்பான்மையுடனான அரசு அமையாவிடினும் மீண்டும் ரணில் தலைமையிலான அரசே உருவாகப்போகின்றது என்பது உண்மை..

சிறுபான்மை மற்றும்  ஏனைய சிறு கட்சிகளினது சனாதிபதியினதும் ஆதரவைக்கொண்டே அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மைத்திரியின் ஆதரவுடனான் ஆட்சியைத்தான் ரணில் அமைக்கக்ப்போகின்றார். அங்கு சனாதிபதியின் ஆட்களும் அமைச்சர்களாக அமரப்போவதில் சந்தேகமில்லை. ஆனால் சிறுபான்மை நாம் தான் சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் உ ள்ளன.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் ரணிலின் ஆட்சி மீது அதீத நம்பிக்கை வைத்து உள்ளனர். ரணில் கூட முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி தனக்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதை தெரிந்து தான் வைத்து உள்ளார். ஆனால் எதிகாலத்தில் எவ்வாறு அரசாங்கம் செல்லும் என்பதில் ஒரு குறி வைத்து இருப்பது எமதும் எமது தலைவர்களினதும் கடமை.

ஏனெனில் ரணில் ஒரு அமெரிக்க ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறைந்து அமெரிக்க ஆதிக்கம் படிப்படியாக கூடும் சாத்தியமே அதிகம். அமெரிக்க ஆதரவு பெரும் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான  வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவே பொதுவாக பேசப்படும் விடயம். இலங்கையிலும் அவ்வாறு நிகழாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் .

ரணில் பிரதமரானாலும் சனாதிபதி மைத்திரி என்பது எமக்கு இருக்கும்  அனுகூலமான விடயம் 

6 comments:

  1. முஸ்லிம் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் தான்தான் முந்திக்கொண்டு கூஜா தூக்கும் வேலையை இனியாவது நிறுத்தி விட்டு பார்லிமேண்டிலாவது ஓன்று பட்டு இருக்க வேண்டும்.அப்போதுதான் ஏதாவது ஒரு வகையில் நம் சமுதாயம் வெற்றி பெற முடியம்.முஸ்லிம்களின் பிரச்சினையை மாற்று மத சகோதர பார்லிமென்ட் உறுப்பினர்கள் பேசிய போதும் இவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு வெளியே போனவர்கள்தான் அப்படி ஒரு நிலைமை இனிமேல் பதவிக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் இவர்கள் நடந்து கொண்டால்.பொது மக்களால் கல்லெறியப்பட வேண்டும்.வேறு வழி இல்லாமல்தான் முஸ்லிம் மக்கள் இம்முறையும் வாக்களித்தார்கள்.

    ReplyDelete
  2. good opinion.same time we should obey islam in our life
    then allah will protect us at all,

    ReplyDelete
  3. அல்லாஹ்மீது நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  4. Allah will guide all muslim parlimentarians, under My3 Ranil leadership. Every one must praise Almighty Allah, who made this change.May Allah guide us to live with peace & harmoney. Alhamthulillah.

    ReplyDelete
  5. everybody feels a little ease in their hearts now right ? feels like this is our country too right ? this is the first step towards a better sri lanka to minorities. do not forget to say thanks to our sinhala brothers who rejected racist mahinda, gnanassara and sent them to the dustbin of history.

    ReplyDelete

Powered by Blogger.