Header Ads



75 தங்க பிஸ்கட்டுகளுடன், விமான நிலையப் பணியாளர் இருவர் கைது

சட்ட விரோதமான முறையில் 75 தங்க பிஸ்கட்டுகளை வைத்திருந்த இரண்டு விமான நிலைய பணியாளர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு  விமானத்தில் வந்த இரு விமான நிலையப் பணியாளர்கள் 7.5 கிலோ நிறையுடைய 75 தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 37.5 மில்லியன் ரூபா  எனவும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

1 comment:

  1. சுங்க அதிகாரிகளுக்குரிய பங்கு கிடைக்கவில்லை போலும்

    ReplyDelete

Powered by Blogger.