மகிந்தவுக்கு ஆதரவாக 65 எம்.பி.க்கள் கையொப்பம், எதிர்கட்சித் தலைவராக்க திட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றிற்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளனர்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியில் அமர்வது குறித்த ஆவணமொன்றில் இந்த உறுப்பினர்கள் நேற்று கையொப்பமிட்டனர்.
இந்த ஆவணம் ஜனாதிபதி மற்றும் புதிய சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை.
இதனால் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளோம்.
இந்தக் குழுவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோர உள்ளதாக வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

oh my god......no idea to quit with dignity..ha....
ReplyDeleteO poor Mahinda. He wants power. That is in his blood. SLFP wil be fools to appoint him as the leader of opposition.
ReplyDeleteHe can not run even opposition leadership because he wants to face court cases lots
ReplyDelete