Header Ads



மஹிந்த, மைத்திரி முரண்பாடுகள் தொடருகிறது - மஹிந்தவுடன் இன்று புதிய 60 எம்.பி.க்கள் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடி கட்சியை தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமயில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்ஸ தரப்பு இன்றைய தினம் தனியான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மஹிந்த பங்கேற்றார் என்பதனை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி செய்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ தரப்பு எதிர்ப்பை வெளியிடுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விடவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

புதிதாக தெரிவாகியுள்ள சுமார் 60 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments

Powered by Blogger.