நாளை 5 ம் ஆண்டு மாணவர்களுக்கான, புலமைப்பரிசில் பரீட்சை!
நாளை நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறவுள்ளது.
இரண்டு வினாப்பத்திரங்களையுடைய இப்பரீட்சையின் முதலாம் பகுதி காலை 9:30இற்கு ஆரம்பமாகி காலை 10.15 மணி வரையும் ,பகுதி இரண்டு 10:30 இற்கு ஆரம்பித்து 11:45 வரையும் நடைபெறும்.
கல்முனை கல்வி வலையத்திலிருந்து இம்முறை 3263 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றுவதாக ஆரம்பக்கல்விக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் மௌலவி .ஜஹாங்கீர் அவர்கள் தெரிவித்தார்.
ஒவ்வொரு பெற்றோரும் இப்பரீட்சைக்கு தோற்றுகின்ற தத்தம் பிள்ளைகள் சித்தியெய்த வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட பிரத்தியேக வகுப்புக்களுக்கும்,விசேட கருத்தரங்குகளுக்கும் அனுப்பி மிகவும் உற்சாகத்துடன் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Part i. - 9.30am. to. 10.15
ReplyDeletePart ii. - 10.45. to. 12.00
இப்பரீட்சையினால் ஆனா பலன் என்ன?
ReplyDeleteகுழந்தைகளுக்கு: வயதுக்கு மீறிய சுமை, மன அழுத்தம், விளையாட்டை மறந்து, தேக ஆரோக்கியத்தை இழந்து, பிஞ்சுப் பருவத்திலேயே தன் நண்பனையும் எதிரியாய் பார்க்கும் நச்சுக் கருத்தை உள்வாங்கி, அப்பப்பா பள்ளிப் பருவத்தில் துள்ளி விளையாட வேண்டிய செல்வங்களின் சுமைகள் தான் எத்தனை பாவம் அவர்கள். அதிலும் பரீட்சையின் பெறுபேறுகள் வந்தபின் – ஒருவேளை - குறைந்த புள்ளிகள் எடுத்து விட்டால், உறவுகளின் ஒன்று கூடலின் போதும், அடுத்த வீட்டு விசேட நிகழ்வுகளின் போதும், ஏன் படித்த பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் , சக தோழர்கள் முன்னால் ஒவ்வொரு முறையும் அவமானத்தால் கூனிக்குறுகி அந்தப் பிஞ்சு உள்ளங்கள் மனதும் இதயமும் சுக்கு நூறாகி காயப்படுவதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா.
பெற்றோர்: பெற்றோரின் நிலையோ இதை விடக் கொடுமை, இப்பரீட்சையினால் வரவுக்கு மீறிய செலவு. விசேட வகுப்பு கருத்தரங்குகள் என்று அதிகப்படியான செலவுகள். அதிலும் பெண் குழந்தையாய் இருந்தால், விசேட வகுப்பு நடக்கும் இடத்திற்கு அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் அழைத்து வருவதற்குமான வாகன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் வசதி படைத்தவர்கள் பரவாயில்லை சமாளித்துக் கொள்வார்கள், அனால் சராசரி வாழ்க்கை நடத்துபவர்களின் நிலை அந்தோ பரிதாபம்!! தன் குழந்தை " அப்பா ஸ்பெஷல் கிளாஸ் இருக்குப்பா, என்னையும் சேர்த்து விடுப்பா" என்று கெஞ்சும் ... ஆனால் அவனோ இந்த மாசத்தை எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று திண்டாடிக்கொண்டிருப்பான், இத்தனை சுமையையும் சமாளிக்கும் பெற்றோரின் மனோ நிலை மாற்றம்; இவ்வதிகப்படியான செலவினால் கிடைக்கபோகும் லாபக்கணக்கு – ஈற்றில் முடிவு , அன்பை பொழிய வேண்டிய பெற்றோரே அவர்களை ஒரு கைதியப் போல் நடத்துகின்றனர் . அதிலும் பரீட்சையின் பெறுபேறுகள் வந்தபின் – ஒருவேளை – தன் குழந்தை குறைந்த புள்ளிகள் எடுத்து விட்டால், உறவுகளின் ஒன்று கூடலின் போதும், அடுத்த வீட்டு விசேட நிகழ்வுகளின் போதும், சக தோழர்கள், சமுகத்தின் முன்னால் “ ரிசல்ட் வந்திட்டே உங்க பிள்ள எத்தனை மார்க் எடுத்திருக்கு” என்று வினவப்படும் ஒவ்வொரு பொழுதும் அவமானத்தால் கூனிக்குறுகி அந்தப் பெற்றோரின் உள்ளங்கள் மனதும் இதயமும் சுக்கு நூறாகி காயப்படுவதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா.
இப்பரீட்சையினால் ஆனா பலன் என்ன?
புத்தி ஜீவிகளும் , கல்விமான்களும், சமுக சிந்தனையாளர்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா ? ... இதனை முற்றாக நீக்காவிட்டாலும் மாற்றுவழியையாவது கண்டு பிடிக்க வேண்டாமா.? கல்வி என்பது நல்லொழுக்கம், பண்பாடு, உயரிய சிந்தனையை அல்லவா தரவேண்டும் ? அனால் இப்பரீட்சையினால் ஆனா பலன் என்ன?
எல்லாக் குழந்தைகளும் சித்தி பெற்று, எல்லா பெற்றோரும் மகிழ்ச்சியுற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.