Header Ads



பாராளுமன்றத்திற்கு 55 பேர் சென்றதால், மாகாண சபைகளில் பாரிய வெற்றிடம்

பல மாகாண சபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதன் காரணமாக 55 பேருக்கான வெற்றிடம் நிலவுகின்றது.

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 4 மாகாண எதிர்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மத்திய மாகாண எதிர்;கட்கி தலைவரான ரஞ்சித் அலுவிஹாரே, சப்ரகமுவ மாகாண எதிர்கட்சி தலைவரான துசிதா விஜேமான்ன, வடமேல் எதிர்கட்சி தலைவர் ஜே.சீ. அலவதுவல, வடமத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சிட்னி ஜயரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஏராளமான மாகாண சபை உறுப்பினர்கள் மேல் மாகாண சபையில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 14 ஆகும்.

வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண சபைகளில் இருந்து ஏழு பேர் வீதம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

தென்மாகாண சபையில் இருந்து ஐந்து பேரும், கிழக்கு மாகாண சபையில் இருந்து நான்கு பேரும், வடமத்திய மற்றும் வட மாகாணத்தில் இரண்டு பேர் வீதம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் எண்ணிக்கை 36 ஆகும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 15 பேரும், ஜே.வீ.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இவ்விரண்டு பேரும் மாகாண சபையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். 

No comments

Powered by Blogger.