Header Ads



அமைச்சர்களின் எண்ணிக்கை 50, 30 ஆக குறைக்காவிட்டால் வழக்கு என ஜனாதிபதிக்கு கடிதம்

எதிர்வரும் தினங்களில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்குமென ரவி கருணாநாயக்க  தெரிவித்தார்.

இதில் ஐ.தே.க.வுக்கு 33 உம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவைகளும் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவை இன்று மாலை அல்லது நாளைய தினம் இறுதி செய்யப்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதியும், பிரதமரும் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர். ஆரம்பத்தில் 30 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் பாராளுமன்றம் கூடிய பின்னர் மற்றையோர் நியமிக்கப்படுவர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2.................

அமைச்சர்களின் எண்ணிக்கை 30ற்கும் மேல் உயர்ந்தால் வழக்குத் தொடரப்படும் என சட்டத்தரணி அருண லக்சிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையிலான அரசாங்கம் தேசிய அரசாங்கமல்ல, கூட்டு அரசாங்கமேயாகும்.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்கும் மேல் அதிகரித்தால் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

தேசிய அரசாங்கம் அமைப்பது என்றால் சிறுபான்மை இன சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.  அரசியல் அமைப்பின் 46.5 சரத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசாங்கமானது தேசிய அரசாங்கமாக கருதப்பட முடியாது.

கூட்டு அரசாங்கமொன்றில் 30க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் அது அரசியல் அமைப்பின் 46.4 சரத்தை மீறும் வகையில் அமையும்.

அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட வேண்டாம் என ஜனாதிபதியிடம் நான் எழுத்து மூலம் கோரியுள்ளேன்.

அவ்வாறு மீறினால் அரசியல் அமைப்பின் 126 சரத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரவும், 1996ம் ஆண்டு 21ம் இலக்க மனித உரிமை ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. சபாஸ்.அமைச்சர்களை அதிகப்படுத்தி இவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது பொதுமக்களின் பணம்.

    ReplyDelete
  2. Do not worry. My3 will bring the money from Polonnaruwa to pay Jumbo Cabinet of Ministers. Yahapalanaya has gone to Dog again after giving the nomination to Mahinda.

    ReplyDelete
  3. முற்றிலும் புறக்கணிக்க முடியாத வாதம்: இது தேசிய அரசாங்கமே அல்ல. எனவே முப்பதுக்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அபத்தம். பேசாமல் தனித்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வதே சிறந்தது. அருண லக்சிறி அவர்களே அப்படியே.. மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட காவாலிகள் உள்வாங்கப் படுவதைத் தடுத்து நிறுத்த சட்டத்தில் ஏதாவது ஷரத்து இருக்கின்றதா என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete

Powered by Blogger.