அடுத்த சபாநாயகர் யார்..? 3 மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் யார்..??
இலங்கையில் அமையவுள்ள புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்த தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார்.
கட்சியிக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கரு ஜயசூரிய இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருதார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மேலும் சில வருடங்கள் தன்னை அரப்பணிப்பதாகவும், அதன் பின்னர் கௌரவமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2
நடந்து முடிந்த பொதுத் தேர்தலையடுத்து காலியாகியுள்ள மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை அடைந்து கொள்வதற்கான பதவிப்போட்டி தற்போது சூடுபிடித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்த வடமேல் மாகாணசபை, மேல் மாகாணம் என்பவற்றின் முதலமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தற்போது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோவும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். எனினும் இந்த மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத அதே வேளை, ஒரு சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஹரீன் முதலமைச்சர் பதவியைப் பிடித்திருந்தார்.
எனவே காலியாகவுள்ள மூன்று முதலமைச்சர் பதவிகளுக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் அதே வேளை , அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான போட்டியும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Will it be a dream for UPFA????????
ReplyDeleteHow about appointing Karuna or Pillayan for the CM post.? They are the best sagunies
ReplyDelete